வெற்றிடம் மாறி
வெற்றிடம் மட்டுமே
குடிபுகும் நாட்களில்
உனக்காகக் காத்திருக்கிறேன்
இதயத்தில் நீ
குடிவரும் நாளில்
உனக்கான பெயர் (நீ வந்ததும் அப்டேட் பண்ணுறேன்)
என்னடா எடுத்ததும் காதல் கவிதையாக இருக்கு ஒருவேளை பையன் லவ்'ல விழுந்துட்டானோனு நினைச்சுக்க வேண்டாம். இப்ப இருக்குற விலைவாசியல்லாம் கண்ணா பின்னானு ஏறுகிறது, எப்படிடா காலத்த ஓட்டறதுனு தோணுது இதுல எங்க காதல் வரும்.
இன்னும் உங்களுக்கு கல்யாணம் ஆகலேன்னா(வெட்டி பசங்க) எப்படி உங்களுக்குள்ள இருக்குங்குற கற்பனையாகவும் கூட இது இருக்கலாம்.
இந்த வருஷம் அப்பரைசல் எப்படியும் ஒன்னும் போட மாட்டாங்க. வேற வேலையும் சுலபமா கிடைக்க மாட்டேன்குது. வயசு வேற ஆச்சு, நம்ம கூட படிச்ச பசங்கள்ளாம் கல்யாணம் பண்றாங்க, சிலருக்கு தன் குழைந்தைகள் 3ஆவது பிறந்தநாள் கூட கொண்டாடிட்டாங்க, இத பாத்தாலே நமக்கும் வயசாச்சுன்னு ஒரு பீலிங்கு.
இதுல கூட இருக்கிறவன் எல்லாம் வீட்ல பொண்ணு பாக்கறாங்கன்னு சொல்லி இன்னும் பெட்ரோல ஊத்தறான்.
வீட்டுல கல்யாண பேச்ச எடுத்துட்டாங்க, ஜாதகமா வந்து கொட்டுது எனக்கு முடியும் கொட்டுது.
ஏதோ மனிதவளத்துறைல வேலை பாத்ததுக்கு ஏதாவது வேற கம்பனிக்கு ஜும்ப் பண்ணி சம்பளத்த ஏத்திக்கலாம்னு பாத்த இப்ப இருக்குற நிலைமைக்கு வேலை வாய்ப்பை விட வேல தேடுறவன் தான் அதிகமா இருக்குறாங்க அதனால அதுக்கும் வழி இல்ல.
நம்ம பேர்ல ஒரு வீடுதான் வாங்கல, நம்ம கெத்த மேயின்டின் பண்ண ஒரு கார் வாங்கி உருட்டுவோம்னு நெனச்சா நண்பன் புல்லட் வாங்கிட்டானு என்னையும் அதே மாதிரி கருப்பு புல்லட் தான் எடுக்கணும்னு சொல்லி என்ன சம்மதிக்க வெச்சுட்டான் அதுக்கு பணம் தயார் பண்ணனும்.
வீட்லயே இருந்த அத்த பொண்ணுகளையும் வேண்டாம்னு ஏற்கனவே டாடா சொன்னது வசதியா போச்சு. எல்லாருக்கும் கல்யாணம் ஆயிடுச்சு.
நாலு வருசமா வேல செஞ்சு என்னாத்த சேத்து வச்ச ஆனந்தானு கேட்ட, ஒரு மண்ணும் இல்ல, ஊதாரிக்கு அர்த்தம் இப்பதான் தெரியுது. சம்பளம் வாங்கி அக்கோண்டுக்கு அப்பத்தான் வந்திருக்கும், எவ்வளவுனு நம்ம பாக்கர்துக்குள்ள மணி அடிக்கும். மச்சி அவசரமா கொஞ்சம் பணம் வேணும் ரெண்டு வாரத்துல தாரேன்னு சொல்லுவாங்க. நம்ம மனசு சும்மா விடுமா அவசரம்னு நெனச்சு இருக்குற அத்தனையும் அல்லி கொடுத்திடறது.
பேசாம கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் அகிடலாமா? அப்படியே சரின்னாலும் எவன் பொண்ணு குடுப்பான் நல்ல பேருக்கெல்லாம் எவனும் பொண்ணு கொடுக்குறாங்க.
ஆனா பொண்ணு வீட்டோட லிஸ்டேவேற
அரசாங்க வேலை
பையன் நிலையான வேலையில் இருக்க வேண்டும். அதிலும் போனஸ், ஊதிய உயர்வு வருஷ வருஷம் இருக்கணும். அரசாங்க வேலை, ஐ.டி வேலை என்றால் முன்னுரிமை. இது என்ன திருமணமா இல்ல வேலைக்கு ஆள் எடுக்கிறார்களா?
வெளிநாடு போகும் வாய்ப்பு
ஐ.டி பசங்கள தேடறதே எப்படியாவது அவன் வெளிநாடு போவான். சொந்தகாரங்க கிட்ட பெருமையா சொல்லலாம், “மப்புல வெளிநாடு போகப் போறான் தெரியுமா..” என்று.
வீடு
சொந்த வீடு இருக்க வேண்டும். இல்லைனா வேண்டாம்.
கார்
பைக் எல்லாம் கூட வேண்டாம் கார் தான் வேண்டும். “அதுக்கு நீங்கள் மாருதி கம்பெனி ஒனரதான் கட்டிக்கணும்…” திருமணத்திற்கு பாக்குற பையன் நல்ல வேலையில் இருந்தால் போதாதா? திருமணத்தின் போதே அவன் பேரன், கொள்ளுப்பேரனுக்கும் சேர்த்து சம்பாதித்து வைத்திருக்க வேண்டுமா?
தனிக் குடித்தனம்
அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்று, தனிக் குடித்தனம். இந்த எதிர்பார்ப்புக்கு எல்லாம் வரதட்சணை என்று பெயரில்லையா?
அக்கா, தங்கை கூடாது
அப்பா, அம்மா உடன் இருக்க கூடாது, உடன் பிறப்புகள் இல்லாத பையன் தேவை. இருவர் மட்டும் தனியே இருப்பதற்கு பெயர் எப்படி குடும்பம் ஆகும்.
பிஸியாக இருக்க வேண்டும்
ஆன்சைட் வாய்ப்பு, கை நிறைய சம்பளம், பதவி உயர்வு என பிஸியாக இருக்கணும். வீட்டில தினமும் அதிக நேரம் இருக்க வேண்டும். இது முடியுமா, இதை அந்த பிரம்மன், சிவனால் கூட இந்த கலியுகத்தில் ஏற்படுத்திக் கொடுக்க முடியாது.
ஐயோ எனக்கும் பொறுப்பு வந்துடுச்சு போலருக்கு, இப்படிலாம் பதிவு எழுதறோம்னு இத எழுதும் போதே நண்பன் ஒருத்தன் கடன் கேட்க்கறான் குடுத்து குடுத்து சிவந்த கையால ஒரு ஆயிரத்த டிரான்ஸ்பர் பண்ணிடோம்ல, திரும்பி வரதுன்னு தெரிஞ்சும் இப்படி பண்றதுல ஒரு திருப்தி.
இந்த கால இளைஞன் என்னலாம் யோசிக்கறான் பாருங்க (என் மைண்ட் வாஸ்ஸாகூட இருக்கலாம்).
இதுல வஞ்ச புகழ்ச்சி அணி எல்லாம் இல்ல, அங்கங்க தற்புகழ்ச்சி மட்டுமே இருக்கும். படிப்போம் மறப்போம்.
கட்டிக்கபோற பொண்ணு எப்படி இருக்கணும் என நான் எழுதணும்னா, இது எல்லாம் நானே எனக்கு மரண ஓலை எழுதி கொடுதுகரதுகு சமம், நாளைக்கு நம்ம கட்டிக்கற பொண்ணு இத பார்த்து அட பாவி அவனா நீ'னு கேக்கலாம்.
சம்பவம் நடந்த இடத்தில சம்பவம் நடந்த நேரத்தில் நான் அங்க இல்லை, இருந்தாலும் பரவால எதோ எழுதறேன்,.
நமக்கும் வீட்டுல பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடாங்க(மனசுக்குள்ள டும்,டும்,டும் ), அதனால என்னனு கேட்கறீங்கள? அட நீங்க வேற பொண்ணு எப்படி வேணும்நு கேட்டா சொல்ல தெரியலங்க, அவங்க கேட்ட நாள்ல இருந்து நாம பாக்கற பொண்ணு எல்லாம் நமக்கு புடிச்சு இருக்குங்க.
ரொம்ப யோசிச்சு வீட்ல பொண்ணா இருந்தா போதும் என சொலிட்டு வந்துட்டேன், இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா ஒரு அளவுக்கு யோசிசுகிற்றுகேன். நம்ம எதிர்பார்ப்புகள் கீழ கொடுத்து இருக்கேன், இதுல கொஞ்சம் பிராக்டிகலா இருக்கும் கொஞ்சம் மொக்கையாகவும் இருக்கும் எல்லாம் சேர்த்து கலந்து கட்டி அடிச்சுருக்கேன்.
1.அழகுங்கறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி, எனக்கு புடிச்ச மாதிரி பொண்ணு வேணும், அத மத்தவங்களுக்கு புடிக்கலனா எனக்கு கவலையே இல்ல.
2.எனக்காக அவங்கள எதுக்கும் மாத்திக்க கூடாது, முக்கியமா அவங்க கேரெக்டர மாத்திக்க கூடாது, எனக்கு தெரிஞ்ச சிலர் அவங்க கணவருக்கு புடிக்காது என்பதற்காக அவங்க அடிப்படை குணத்தை கூட மாத்திக்கொண்டு உள்ளனர், அது நமக்கு தேவை இல்லை.
3.முடிவெடுக்கறதுல என்னமாதிரி ஒரு ஆள் இருக்க முடியாது, எப்ப என்ன முடிவு எடுப்பேன் என தெரியாது, என் மனசுக்குள்ள அப்போதைக்கு ம்னு சொல்லும் அத தான் நானும் ம்னு சொல்லுவேன். அதனால நல்ல தீர்மானமா முடிவெடுக்க தெரிஞ்சு இருக்கனும்.
4. நம்ம சம்பளத்துல கோவை'ல குடும்பம் நடத்தறது சமாளிக்கலாம், நம்ம ஒருத்தனுக்கு இப்ப ஓகேதான், இன்னொரு பொண்ணு வந்தா டாப் கியர்ல ஓடுற வண்டி இருவத்துல போன இடிக்குறமாதிரி இருக்கும் கொஞ்சம் கியரை கம்மி பண்ணிக்கலாம். இருந்தாலும் பொண்ணு வீட்டுல சும்மா இருந்த அவங்க மனசுக்குள்ள ஒரு இருக்க உணர வரும் எத்தனை நேரம் தான் டீவி பாக்குறது அதனால பொண்ணு கண்டிப்பா வேலைக்கு போகணும் அப்பத்தான் வெளியுலகம் தெரியும். ( பெண்ணுரிமை, அது இதுன்னு என்கிட்டே சண்டைக்கு வந்துடாதீங்க, என் சொந்த அனுபவத்துல சொல்றேன் எல்லா பொண்ணுங்களுக்கும் கண்டிப்பா ஒரு பினான்சியல் சுதந்திரம் வேணும்) நம்ம விட அதிகமாவோ கம்மியாவோ சம்பளம் வாங்கறது பிரச்சன இல்ல ஆனா ஒரு சாதாரண வேலை போதும் காலைல நேரமே போயிடு சக்கையா புழிஞ்சு எடுக்கற வேலை எல்லாம் வேண்டாம்.
5. எனக்கு ரொம்ப ஆசை எல்லாம் இல்லை, எதிர்பார்ப்பும் இல்லை. எது தோணுதோ அத செய்வேன்.
6. எனக்கு கார், பைக், ஆட்டோமொபைல் மேல ரொம்பவே ஆசை, டிரைவிங் மேல ரொம்ப ஆசை நான் ஓட்டுற வண்டி என்னுடையதா இருக்கணும், நண்பர்களுடன் அடிக்கடி ஊர் சுத்துவேன், அதனால அடிக்கடி அம்மா வீட்டுக்கு போகணும் என்று சொல்வது தப்பு இல்ல, போகலாம் ஆனா கார்ல தான் போகணும்னு ஆடம் பிடிக்க கூடாது சும்மா பஸ்ல போகலாம், ட்ரைன்ல போகலாம் இல்ல பைக்ல கூட போலாம்.
6. பொண்ணுக்கு டிரைவிங் தெரிஞ்சு இருக்கனும். நமக்கு ஏதாவது வேலை இருந்தாக்கூட நீ வண்டிய எடுத்துட்டு பொய்க்மானு சொல்லிடலாம்.
7. சொந்த வீடு இருக்கு, இருந்தாலும் என் பேர்சொல்லும் ஒரு வீடு வேண்டும், வாங்கலம் இல்ல வாங்கணும் ஆனா அதுக்கு முன்னாடி ஒரு பைக் வாங்க பணம் சேத்தியாச்சு அதை எக்காரணம் கொண்டும் குறை சொல்ல கூடாது (ஆமாம் இருபத்தி அயிந்து வருடம் பழைய பைக்க ஒன்னேகால் லட்சம் கொடுத்து வாங்கணும்) இந்த பைக்குக்கு வாங்க ஒரு கதை இருக்கு அது அப்பறமா பாத்துக்கலாம்.
8. சாப்பாட்ல உப்பு இல்ல காரம் இல்லனு சொல்ல மாட்டேன் ஏன்னா நாலு வருஷம் புதுசு புதுசா செஞ்சு சாப்புடுறேன்.
9. மனதாலும் உடலாலும் வலுவா இருக்கணும். நான் கொஞ்சம் உடற்பயிற்சி பிரியன். காலைல தம்புள்ள ஒரு முப்பது எடுக்கலைனா அந்த நாளே சரியா ஓடாது.
10. இன்பம், துன்பம் இருக்குறது தான் வாழ்கை, நம்ம மனசுக்குள்ள எப்பவும் இன்பமா இருக்கணும்னு நெனச்சுட்டு துன்பத்தத்துக்கு தான் அதிக இடம் கொடுக்குறோம். அதுனால வாழ்க்கைய தராசு மாதிரி சம்மமா பாத்துக்கணும்.
இதெல்லாம் எஸ்.வி.சேகர் ஒரு படத்துல பத்து கண்டிசன் போடுவாரே அதுமாதிரி இருக்கும்.
ஆதலால் இந்த அப்பாவி ஆனந் சொல்லிக் கொள்வது என்ன வென்றால், இது நான் சுயநினைவுடன் இருக்கும்போது எழுதிய மரண சாசனம், இதை எனக்கு எதிராக யாரும் பயன்படுத்தினால் அதற்கு தாங்கள் மட்டுமே பொறுப்பு.
எல்லா விதிகளும் தளர்த்திக்கொள்ளப்படும் தகுந்த பெண் கிடைத்தால்..... பொண்ணு கிடைக்கறது ரொம்ப கஷ்டமா இருக்காம இப்ப.