1
இரண்டு தீப்பெட்டியை நூலால் கட்டி எந்த செலவும் இல்லாமல் இருவர் மணிக்கணக்கில் பேசி மகிழ்ந்தது சிறுவயது நூல்போன் தொழில்நுட்பவல்லுநர் .

பள்ளி சீருடை இன்னும் ஈரமாக இருக்கிறது இன்னைக்கு ஸ்கூல் போகமாட்டேன் என காரணம் தேடிய நடிகன்.

வீட்டுப்பாடம் நோட்டு புத்தகத்தை வைக்கும் சாக்காக ஆசிரியர் அறைக்கு சென்ற அனுபவசாலி.

தென்னமட்டையில் நிலத்தில் படகு சவ்வாரி செய்யும் அனுபவம் கொண்ட வில்லேஜ் விஞ்ஞானி.

மளிகை கடைக்கு சென்று முட்டை வாங்கி சைக்கிளின் ஒருகையில் முட்டை கவர் இன்னொரு கை சைக்கிளையும் ஓட்டி முட்டை உடையாமல் வீடு சேர்க்கும் பொறுப்பாளி. 

மழைக்கு தேங்கும் தண்ணீரில் கப்பல்விட்டு விளையாடி தேங்கிய தண்ணீர் நடுவில் இருக்கும் சிறு பாறையில் தாவியும் குதித்தும் விளையாடிய விளையாட்டு வீரன்.

சலிப்பூட்டும் வகுப்பறை இல்லை, வீட்டுப்பாடம் இல்லை, விளையாட்டும் புதுஇட அனுபவமும் கொண்ட பள்ளி சுற்றுலா ஒரு உலகம் சுற்றும் வாலிபன்.

 பழத்தின் விதையை விழுங்கினாள் வயிற்றில் செடி முளைக்கும் என்பதையும் நம்பும் அப்பாவி.

 மழைகால காலை நேரம் மறைத்தடியில் வருபவரை மரத்தை ஆட்டி அவர்களை நழையவைக்கும் புத்திசாலி.

 வகுப்பறை மேஜையில் என் விருப்ப தளம் போடும் இசை ஞானி
 விடுதியில் தொலைக்காட்சி படம் பார்க்க நடுப்பகுதியை கைப்பற்றும் வித்தகன்.
நோட்டுப்புத்தக பையை ஏப்படிவேண்டுமானாலும் எடுத்து செல்லலாம் என சிந்திக்கும் சிந்தனைவாதி.  
 
அழிப்பான் இல்லாத நேரத்தில் ஏச்சில் வைத்து அழிக்கும் அப்பிராணி.  

 நோட்டுப்புத்தக பையில் தண்ணீர் பாட்டில் நனைத்த வீட்டுப்பாட புத்தகத்தை ஆசிரியரிடம் கொடுக்கும் வெகுளித்தனம் .
உறுதி மொழி சொல்லும் பொழுது நீட்டிய கை வலிக்காமல் இருக்க முன் இருப்பவர் தோள்மேல் வைத்து சமாளிக்கும் சாமத்தியசாலி.

பஞ்சர் ஆகாத சக்கரம், பெட்ரோல் டீசல் இல்லாம காடு மேடு எல்லாம் சுத்துற எங்க டயர் வண்டி.

கிரிக்கெட் கூட பந்து மிஸ் ஆகும் ஆனா இது கில்லி..

டப்புனு வீசி தட்டுன்னு தரையை தொட்டு கப்புனு வீசுன கள்ள புடுச்சி பண்ணாங்கல்லு 

 பள்ளிக்கூடம் போகும் போதே பல பட்டம் விட்டவங்க.
 மசமச / அஞ்சு கல்லு .. சிக்குன்னா நீ முடுஞ்ச..
 எங்க பம்பரம் சுத்தாத இடமே இல்ல 

Post a Comment

 
Top