1

தோள் கொடுக்கும் தோழனாக நீ தோள் கொடுத்தாய் பலமுறை எனக்கு ... வருத்தமான தருணங்களையும் மகிழ்வாக்கும் உன் வாஞ்சையான பேச்சுக்கள்.. கோபம் வருத்தம் என எது இருந்தாலும் அந்நேரமும் நீ காமடி செய்து கலகலப்பாய் இருப்பாய்... கோபத்தை தவிர வேறேதும் அறியா நான் உன்னை கண்டு பலமுறை பொறாமை கொண்டிருக்கிறேன் .. எந்த விஷயத்தையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் இயல்பு உனக்கு மட்டுமே சாத்தியம் .... ஜாதியால் வேறான நம்மை மனதால் ஒன்றாக்கியது இந்த "நட்பு".... உன்னை நண்பனாய் எனக்களித்த "நட்புக்கு" நான் நாளெல்லாம் நன்றி சொல்லுவேன் ... நாளெல்லாம் நட்புடனே நாமென்றும் நடைபோட ஆண்டு நூறு நீ கடந்து ஆனந்தமாய் நீ வாழ . நட்பின் வாழ்த்துக்கள் இந்த நண்பனின் வாழ்த்துக்கள் .......... 

செந்தில்பிரபு, எங்க ஊர்காரன் தான் என் சிறு வயது நண்பன் எல்.கே. ஜி சேரும்பொழுது வளுக்கடாய நட்பாக கூட இருக்கலாம். எனக்கு அவன் துணையாகவும் அவனுக்கு நான் துணையாகவும் இருக்கவேண்டும் என்று சொல்லி பள்ளி விடுதியில் சேர்த்தனர் எனது பெற்றோர். அந்த கால நினைவுகள் இப்பொழுது சரியாக நினைவில் இல்லை.

பிரகாஷ், எங்க ஊர்கார பையன் தான் இரண்டாம் வகுப்பு முதல் நான்காம் வகுப்பு வரை ஒன்றாக படித்தோம். இந்த சம்பவம் நடக்கும்பொழுது நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்று வழக்கம் போல பள்ளி முடிந்ததும் பள்ளியிலேய டியுசன் இருக்கும். டியுசன் முடியவும் பள்ளி பேருந்து எடுக்கவும் சரியாக இருக்கும். முதல்முறையாக பள்ளி பேருந்தை விட்டுவிட்டேன். பிரகாஷும் நானும் ஒரே ஊர் ஒரே வகுப்பு சுரேஷ் எங்களுக்கு பேருந்துக்கு காசு கொடுத்தான் அந்த நட்புக்கு இன்றும் நன்றிகள். எங்கள் ஊருக்கு பக்கம் போகும் ஒரு தனியார் பெருந்து இப்பொழுது ஸ்ரீ தேவி யாக இருப்பது அப்பொழுது எஸ்.ஆர்.எஸ் என்ற பெயரில் இருந்தது. பள்ளி பக்கத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் பேருந்துக்கு காத்திருந்தோம். பேருந்தும் வர பத்திரமாக எங்கள் ஊர் வந்தும். 2 கிலோ மீட்டர் நடைபயணமாக வீடும் வந்து சேர்ந்தோம். இந்த ஒரு பயணத்திற்கு பிறகு நடந்த விளைவுகள் தெரியாமல் நான் என் தோட்டதில் விளையாட சென்றுவிட்டேன்.

பள்ளி பேருந்தில் நான் வராததால் என் அப்பா பள்ளிக்கு தொலைபேசியி பள்ளியில் விசாரிக்க அவர்களோ நாங்கள் பள்ளியில் தான் இருக்கிறோம் என்று சொல்ல எங்க அப்பா புல்லட்டை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றுவிட்டார். பள்ளியில் நான் இல்லை என்றதும் பள்ளி ஆசிரியரிடம் வாக்குவாதம் தொடர. என் அம்மா பள்ளிக்கு நான் வீடு வந்ததை தொலைபேசியில் தெரிவிக்க அப்பா வீடு திருன்பினார்.

மறுநாள் பள்ளியில் என்னையும் பிரகாசையும் அழைத்து மதியம் வரை முட்டி போடா வைத்து விட்டார்கள். பின் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பூசையும், காதணி விழாவும் (வழக்கமாக அந்த பள்ளியில் நடப்பதுதான் தலைமை ஆசிரியர் அவர் பெயர் நினைவில் இல்லை அவர் நெகம் பையன் படுத்தி மாணவர்கள் காதில் ஓட்டை போடுவார் ) நடந்தது.
 

சுரேஷ், நான் நான்காம் வகுப்பு படிக்கும்பொழுது கிடைத்த நட்பு, நண்பர்கள் அதிகம் இருந்தும் நினைவில் இருப்பது ஒருவன் தான். இவனை பற்றி மேலே சொல்லிவிட்டேன்.

நான்காம் வகுப்பு முதல் ஏலாம் வகுப்பு நட்புகள்
 


சாமிநாதன், தடியன் என நாங்கள் செல்லமாக கூபிடுவோம், அவன் சின்ன வயதில் ரொம்ப குறும்பு தினமும் எங்க ஊர்காரங்க புகார் சொல்லிட்டே இருப்பாங்க. முரட்டு தான உடல் இருந்தாலும் குழந்தை மனம் படைத்தவன். எப்ப கூப்டாலும் அங்கதான் வர்றேன்னு சொல்லுவான் ஆனா வரமாட்டான். பள்ளி முடிந்ததும் அவனுடன் சைக்கில் பயணம் மிகவும் சுவாரசியமானது. சாலை விழும்பில் சைக்கிளை ஓடுவது, பிளாஸ்டிக் கவரில் காற்றை நிரப்பி ரோட்டில் போட்டு அது வரும் வாகன சக்கரத்தில் சிக்கி வெடிக்க செய்வது.

இளங்கோ, குண்டா என செல்லமாக எங்க செட் கூபிடுவோம், பள்ளி வயதில் பிரிந்த எங்கள் நடப்பு வட்டத்தை கல்லூரி காலங்கள் முடிந்து மீண்டும் ஒன்று சேர்த்தவன். நங்கள் இருவரும் சந்தித்தால் அதிகம் சிக்கன் சூப் சுவைப்போம். கணினியில் கொஞ்சம் வித்தைகாரன்,


கலைச்செல்வன், கலை என செல்ல பெயருண்டு, தீவிர கார் பிரியன் மற்றும் கார் ஓட்டவும் பிடிக்கும், காரில் ஏறினாள் கண்டிப்பாக டிரைவர் சீட்தான் கேப்பான். ஒருசமயம் நானும் கலையம் சைக்கிளில் ஊர் சுற்றி விட்டு எங்கள் அமுச்சி வீட்டுக்கு சென்றோம் அங்கு தண்ணீர் தொட்டியில் விளையாடி அவன் கைகடிகாரம் முழுதும் தண்ணீர் புகுந்து பழுதானது. கலையிடம் எனக்கு பிடித்தது ஒளிவு மறைவின்றி பேசுவான், தன்னம்பிக்கை அதிகம்.கல்லூரி காலங்களில் என் வீட்டுக்கு நண்பர்கள் திடீர் வருகையால் அவர்களை மதிய சாப்பட்டிற்கு வெளியே கூட்டி சென்றுவிட்டேன் என் கையி பணம் குறைவாக இருந்தது எட்டு பேர் இருந்ததால் செலவும் கொஞ்சம் அதிகமானது என் நிலையை பார்த்தே புரிந்துகொண்ட  அந்த  இக்கெட்டான நிலையில் எனக்கு உதவினான்.  


காளிமுத்து,   கிளி என செல்ல பெயர் கொண்டவன், வகுப்பில் அதிக நாட்கள் என்பக்கத்தில் இருந்தவன். ஒன்றாக விளையாடிய காலங்கள் அதிகம். பள்ளி காலங்களில் குழுவாக மரங்கள் வளர்த்தோம், நானும் கிளியும் ஒரு குழு போட்டி போட்டுகொண்டு தண்ணீர் ஊற்றுவோம்.          

   


Post a Comment

 
Top