ஞாபகம் வருதே....! ஞாபகம் வருதே......!! பொக்கிஷமாக நெஞ்சில் சுமந்த நினைவுகள் எல்லாம் ஞாபகம் வருதே....!!!
எனது விவரணம் காண வந்த உங்களுக்கு எனது முதற்கண் வணக்கம் மற்றும் நன்றிகள். இந்த தொகுப்பு என்னைப்பற்றி உங்களுக்கு தெரிவிக்க மட்டும் இல்லை, எனது கடந்த கால நினைவுகளை நானே பார்க்கவும் தான். இந்த உலகில் எனது பங்கானது என்னால் மட்டுமே உருவாக்கப்பட்டது. என்னைப்போல் யாரும் இல்லை, மற்றவர் போல நானும் இல்லை. எனது வாழ்கை பயணத்தில் நான் சந்தித்த நபர்களும் என்னை திசையை மாற்றியவர்கள் பலர் பற்றியும் எனது நினைவுகளில்.
அனைவருக்கும் முதற்கண் தெய்வம் அவர்கள் பெற்றோர்களே. இந்த உலகை நமக்கு காட்டியதும் அதன் பெயர், குணம், எப்படி அணுகுவது, கையாள்வது போன்ற அனைத்தையும் எனக்கு கற்றுத்தந்த என் பெற்றோருக்கு சமர்ப்பணம்.
பாலன் பருவம் 1987 முதல் 1993 வரை:
1986......
கொங்கு மண்டலமாம் கோவை, 3 டிசம்பர் 1986'ல் கார்த்திகை மாத 4.17 அதிகாலை நேரம் ஷீலா மருத்துவ மனையில் நான் பிறந்தேன், 576 மெகாபிக்சல் கொண்ட எனது கண்கள் எதை முதலில் படம் பிடித்து 2.5 பீட்டா பைட்ஸ் மூளை நினைவில் படிந்தது என்பது இன்றும் எனக்கு நினைவில்லை. என் அம்மா அதிகம் என்னிடம் சொன்னது என் அமுச்சியை (சுப்பம்மாள்) தான் முதலில் பார்த்தேன் என்று.
குறள் 391:
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
மணக்குடவர் உரை:
கற்கப்படுவனவற்றைக் குற்றமறக் கற்க: கற்றபின்பு அக்கல்விக்குத் தக வொழுக. இது கற்கவும் வேண்டும்: அதனை கடைப்பிடிக்கவும் வேண்டுமென்றது.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஏதோ ஒரு வகையில் வாழ்வின் அனைத்துப் பாகங்களையும் கற்கின்றான். கல்வி கற்பதற்காக தனது வாழ்க்கைக் காலத்தின் பெரும் பகுதியை செலவு செய்கிறான். சில சந்தர்ப்பங்களில் தான் கல்வியின் உச்சத்தை அடைந்து விட்டதாக கூறியும் கர்வம் கொள்கின்றான்.
என்னையம் கர்வம்கொள்ள செய்ய எனது பெற்றோர் 1991ஆம் ஆண்டு, திருப்பூர் மாவட்டம் சின்னக்கரையில் அமைந்துள்ள பார்க் பள்ளியில் என்னை சேர்த்தனர். பச்சை நிற கோட்டு சூட்டு போட்டு ஒரு புகைப்படமும் எடுத்துவிட்டனர். பார்க் என்ற சொல் போலவே அந்த பள்ளியும் இருந்தது. இயற்க்கை சூழலோடு ஒன்றிய அந்தப்பள்ளி நுழைவாயில் முதல் சிறிது தூரம் வரை சாலை இருபுறமும் குதிரைகள் இருக்கும். சிறுவர்கள் விளையாட்டு திடல் அருகில் வான் கோழிகள், புறாக்கள், முயல்கள் இருக்கும். ஒரு பிள்ளயார் கோவில் இருக்கும்.
என் நினைவில் இன்றும் இருப்பது சில காட்சிகள் மட்டுமே:-
விடுதியில் என் உடமைகள் இருக்கும் ஒரு பச்சை நிற இரும்பு பெட்டி.
இரண்டு இட்டலியுடன் சாம்பாருக்கு நின்றது.
பேருந்தில் சென்ற ஒரு பள்ளி சுற்றுலா விலங்குகள் பூங்கா.
அம்மா வருகைக்காக காத்திருக்கும் ஞாயிற்றுக்கிழமைகள்.
பிள்ளையார் கோவில் மணி.
எனக்கு எழுத பழக்கி விட்ட விடுதியில் ஒரு ஆசிரியை.
பள்ளி ஆண்டுவிழாவின் பொது எனக்கு மிட்டாய் தந்த ஒரு அண்ணா.
விளையாட்டு பொருளாக என்னிடம் இருந்த பொம்மை ஹெலிகாப்டர்.
ஒருவருடம் எல்.கே.ஜி முடிவில் முலாண்டு விடுமுறைக்கு அனைவரும் வீடு சென்றுவிட்டனர். மறுநாள் மதியம் என் அம்மா என்னை கூட்டி செல்ல வந்தார்கள். பட்டன் இல்லாத ட்ரவுசருடன் மூக்கு சளியுடன் நின்ற என்னை பார்த்த என் அம்மா தன் முந்தானையால் என் முகத்தை துடைத்து தாலி சங்குளியில் இருந்த பின்ஊசியை எடுத்து எனது ட்ரவுசரை சரிசெய்தார்.
என் முதல் நண்பன்:
“நட்பு” என்பது என்ன?
குறள் 788:
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதுஆம் நட்பு”
பரிமேலழகர் உரை:
“இடுப்பில் கட்டியிருக்கும் ஒருவரது ஆடை திடீரென அவிழ்ந்துவிட்டால் அந்த ஆடை கீழே விழுவதற்கு முன்பே, அவரது கைகள் அந்த ஆடையைத் தாங்கி அவரது மானத்தைக் காக்கிறது. இதைப்போலவே, ஒருவருக்கு துன்பம் வருகின்றபொழுது அந்தத் துன்பத்தைத் தாங் குவதற்கு துணைநிற்கும் சக்தியாக இணைந்து, விரைந்து செயல்படுவது தான் உண்மையான நட்பாக அமையும்” என்கிறார் திருக்குறள் தந்த திருவள்ளுவர்.
செந்தில் பிரபு, வளுக்கடாய நட்பாக கூட இருக்கலாம். எனக்கு அவன் துணையாகவும் அவனுக்கு நான் துணையாகவும் இருக்கவேண்டும் என்று சொல்லி பள்ளி விடுதியில் சேர்த்தனர் எனது பெற்றோர்.
எல்லாருமே ஏதோ ஒரு சமயத்தில் தனிமையாக உணருவார்கள். ஒருவரை சுற்றி எப்போதும் ஆட்கள் இருந்தாலும், அவர் தனிமையாக உணரலாம். ஏன்? ஏனென்றால் ஒருவருக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல, ஆனால் எத்தனை பேர் உண்மையான நண்பர்களாக இருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
குழந்தை பருவத்தில் நட்பு என்பது நண்பர்கள் மட்டும் இல்லை அவர்கள் பெற்றோரும் தான். எந்த குழந்தையும் தான் செய்ததை மற்றும் சொல்ல வேரும்புவதை முதில் சொல்ல நினைப்பது பெற்றோரிடம் தான். அதை உதசினப்படுட்டப்படும் பலருக்கு தெரிவதில்லை அந்த சிறு நெஞ்சம் அவர்களை விட்டு விரைவில் விலகும் என்று.
1992.....
ஏ.ஆர்.சென்னிமலைகௌண்டர் மெற்றிக் மேல்நிலை பள்ளி - சோமனூர்:
ஒருவருட விடுதி வாழ்க்கையில் என் உடல் நிலை மிக மோசமடைய 1992 சோமனூரில் அமைந்துள்ள ஏ.ஆர்.சி மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் யு.கே.ஜி'ல் சேர்த்தனர். காலை மணி 7.30க்கு பள்ளி பேருந்து எங்கள் ஊரை வந்து சேரும். எங்கள் தோட்டத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் தான் பேருந்து நிறுத்தம் இருக்கும்.
1993...
உண்மையான பக்தி அது நிறைவேறவில்லை என்றலும் ஒரு சமாதானம்:
பேருந்தில் செல்லும்பொழுது ஏ.பி.டி பார்சல் சர்வீஸ் லாரியை பார்த்ததும் கைகள் தானாக அஞ்சநேயரை கும்பிம் ஒரு பயம் கலந்த உண்மையான வேண்டுதல் "சாமி இன்னிக்கு அந்த மிஸ ஸ்கூலுக்கு வரக்குடாது " மீறி வந்தால் பள்ளியில் ஒரு அணில் பார்த்ததால் வேண்டுதல் பலிக்கவில்லை என்று மனதை சமானம் செய்வதும் உண்டு.
குறள் - 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
திரு மு.வரதராசனார் உரை:
கடவுளின் உண் மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியா மையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில் லை.
மீள் பருவம் 1994முதல் 1996 வரை
1994....
அந்த பள்ளியில் ஒரு ஆசிரியை திருமதி கலாராணி இன்னும் என் நினைவில் இருக்கிறார்.
அடி உதவுவது போல அண்ணன் தம்பிகள் உதவமாட்டார்கள் என்பது போல வகுப்பில் அதிக ஆடி வாங்கினால் எப்படி மறக்கும். அப்போது நான் படிப்பில் கொஞ்சம் மந்தம் தான்.
முதல் தனியார் பேருந்து பயணம்:
இந்த சம்பவம் நடக்கும்பொழுது நான் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அன்று வழக்கம் போல பள்ளி முடிந்ததும் பள்ளியிலேய டியுசன் இருக்கும். டியுசன் முடியவும் பள்ளி பேருந்து எடுக்கவும் சரியாக இருக்கும். முதல்முறையாக பள்ளி பேருந்தை விட்டுவிட்டேன். பிரகாஷும் நானும் ஒரே ஊர் ஒரே வகுப்பு சுரேஷ் எங்களுக்கு பேருந்துக்கு காசு கொடுத்தான் அந்த நட்புக்கு இன்றும் நன்றிகள். எங்கள் ஊருக்கு பக்கம் போகும் ஒரு தனியார் பெருந்து இப்பொழுது ஸ்ரீ தேவி யாக இருப்பது அப்பொழுது எஸ்.ஆர்.எஸ் என்ற பெயரில் இருந்தது. பள்ளி பக்கத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் பேருந்துக்கு காத்திருந்தோம். பேருந்தும் வர பத்திரமாக எங்கள் ஊர் வந்தும். 2 கிலோ மீட்டர் நடைபயணமாக வீடும் வந்து சேர்ந்தோம். இந்த ஒரு பயணத்திற்கு பிறகு நடந்த விளைவுகள் தெரியாமல் நான் என் தோட்டதில் விளையாட சென்றுவிட்டேன்.
பள்ளி பேருந்தில் நான் வராததால் என் அப்பா பள்ளிக்கு தொலைபேசியி பள்ளியில் விசாரிக்க அவர்களோ நாங்கள் பள்ளியில் தான் இருக்கிறோம் என்று சொல்ல எங்க அப்பா புல்லட்டை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடம் சென்றுவிட்டார். பள்ளியில் நான் இல்லை என்றதும் பள்ளி ஆசிரியரிடம் வாக்குவாதம் தொடர. என் அம்மா பள்ளிக்கு நான் வீடு வந்ததை தொலைபேசியில் தெரிவிக்க அப்பா வீடு திருன்பினார்.
மறுநாள் பள்ளியில் என்னையும் பிரகாசையும் அழைத்து மதியம் வரை முட்டி போடா வைத்து விட்டார்கள். பின் பள்ளி தலைமை ஆசிரியரிடம் பூசையும், காதணி விழாவும் (வழக்கமாக அந்த பள்ளியில் நடப்பதுதான் தலைமை ஆசிரியர் அவர் பெயர் நினைவில் இல்லை அவர் நெகம் பையன் படுத்தி மாணவர்கள் காதில் ஓட்டை போடுவார் ) நடந்தது.
குறள்:611
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்.
குறள் விளக்கம்:
நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும்.
இதன் மூலமாக நான் கற்றுக்கொண்டது: எந்த புது மூயற்சி செய்தாலும் அதன் பின் விளைவுகள் பின் நாட்களில் தான் தெரியும்.
கொடைக்கானல் சுற்றுலா :
1821இல் லெப்டினன்ட் பி. ச. வார்டு என்பவர் இப்பகுதியை நில ஆய்வு செய்தார். இந்தியாவில் அரசுப் பணியில் இருந்த ஆங்கிலேயர்கள் வசிக்க ஏற்ற இடம் என கருதினார். 1845 இல் இங்கு பங்களாக்கள் அமைத்தார். போக்குவரத்திற்கு போதிய வசதியில்லாததால் அப்போது குதிரையிலே சவாரி செய்து மலைக்கு வந்து தங்கினர். பின் படிப்படியாக 1914 ஆண்டில் தான் முழுமையான சாலைவசதிகள் உருவாக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் காலத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் அனுபவித்துவந்த கோடை வாசத்தலம் தற்போது அனைவரும் சென்று வரும் சுற்றுலா இடமாக மாறியுள்ளது.
எனது நினைவில் இருக்கும் ஒரு குடும்ப சுற்றுலா மேற்குத் தொடர்ச்சி மலைகளில் கொடைக்கானல். என் அம்மா அப்பா, தங்கை, தம்பி, பெரியப்பா, பெரியம்மா, அம்முசியுடன் அதிகாலை நான்கு மணிக்கு அம்பாசிடர் காரில் பழனியை நோக்கி பயணம் தொடர்ந்தது. பழனி அடிவாரத்தில் தரிசனம் முடித்துவிட்டு காலை சிற்றுண்டியும் முடித்துவிட்டு கார் சீறி பாய்ந்தது மலைப்பாதையை நோக்கி.
போகும் வழிகளில் இருபுறமும் மாந்தோப்பு மலைப்பாதையில் பூத்து குலுங்கிய மலர்களை ரசித்தபடி மலைப்பாதை வந்தது. முதல் வளைவே எனக்குள் ஒரு சிலிர்ப்பை ஏற்ப்படுத்தியது. பல வளைவுகள் முடித்து ஒரு வளைவில் காரை நிறுத்திவிட்டு கீழே பூமியை பார்க்கும்பொழுது பெரிய வாகனங்களும் சிறிதாக தெரிந்தது. பழனி மலை ஒரு சின்ன பாறை போல தெரிந்தது.
குறள் 596:
உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து.
சாலமன் பாப்பையா உரை:
நினைப்பது எல்லாம் உயர்ந்த நினைப்பாகவே இருக்கட்டும். அவ்வுயர்வான எண்ணம் ஒருவேளை வேறு காரணங்களால் நிறைவேறாது போனாலும், பெரியோர் நம்மைப் பாராட்டுவர். ஆகவே, அது நிறைவேறியதாகவே கருதப்படும்.பெரியம்மா , நான், அம்மா , தங்கை, தம்பி மற்றும் பெரியப்பா.
மறவோன் பருவம் 1997 முதல் 2000 வரை
1997...
அவினாசி கல்வி நிலையம்:
எனது ஊர் எனது பள்ளி, 1997'ல் நான்காம் வகுப்பில் சேர்ந்தேன். பத்து நண்பர்களுடன் தொடங்கிய நட்பு வட்டாரம் நான்கு வருடத்தில் பதினைந்தாக வளர்ந்தது. எனக்குள் அதிக மாற்றங்கள் ஏற்பட்ட காலம்.
Senthilprabhu,
Karthik,
Gopalakrishnan(Gopal),
Manojkumar,
Ambika,
Vanitha,
Prema,
இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.முருகப்பன் அவர்கள் மாணவர்களிடம் அன்பும் அக்கறையும் கொண்டவர்.
ஆசிரியர்கள் என்றால் இரண்டு பிரிவு உண்டு கண்டிப்பான ஆசிரியர் மற்றும் அன்பான ஆசிரியர். இந்த கண்டிப்பான ஆசிரியர்கள் எப்பொழுதும் தங்கள் ஆதிக்கம் மற்றும் அதிகாரத்தை பள்ளிகளில் உயர்ந்தே காட்டுவர். அன்பான ஆசிரியர்கள் ஆதிக்கம் எப்பொழுதும் மாணவர்கள் மனதில் பசுமரத்தாணி போல நிலையாக இருக்கும்.
முதலில் எப்பொழுதும் அன்பை தொடங்குவோம் அன்பான ஆசிரியர் பட்டியலில் முதிலில் வருபவர் செல்வி ஜானகி அவர்கள் வகுப்பறையில் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். அன்பானவர் வகுப்பில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அனைவரிடமும் மிகுந்த அக்கறை கொண்டவர் 2000'களில் இயற்கை எய்திய அவருக்கு என் உள்ளம் கனிந்த வணக்கங்கள்.
இரண்டாம் இடத்தில் திரு,பழனி ஆசிரியர் அவர்கள் எங்கள் தமிழ் ஐயா. அவர் எங்களுக்கு தமிழை மட்டும் கற்று தரவில்லை இயற்கையை நேசிக்கவும் கற்றுதந்தார். பள்ளி வளாகத்தில் மரங்களை நட்டு ஒவ்வொரு மாணவருக்கும் மூன்றும் செடிகள் என் பிரித்து தினமும் அதற்கு நீர் ஊற்றி வளர்த்தோம். இன்றும் அந்த பள்ளி வளாகத்தில் பெரிய மரங்களாக செழித்து இருக்கிறது.
கண்டிப்பான ஆசிரியர்கள் என்றால் அவர்கள் மாணவர்கள் மத்தியில் எதிரிகள் இல்லை. மிகவும் கடுமையாக நடந்துகொள்பவர்கள் அவர்களுக்கும் மாணவர்கள் மீது அக்கறை இருக்கும். எப்படி ஒரு வீட்டில் அம்மா அன்பானவராகவும் அப்பா கண்டிபானவராகவும் இருப்பார்களோ அதே போல தான் தவறுக்கு தண்டனைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
அந்த நாட்களில் எனக்கு மின் மற்றும் மின்னணு பொருட்கள் மீது அதிக ஈர்ப்பு இருந்தது. எப்படி இந்த வானொலி, தொலைக்காட்சி, விசைபோரிகள் இயங்குகிறது என்று ஆராய தொடங்கினேன். ஒவ்வொரு முறையும் ஏதாவது மின் கருவிகளை கலட்டும்போளுதும் என் அப்பாவிடம் திட்டு வாங்குவது சகஜம்.
1998...
என் முதல் மின்காந்தம் பரிசோதனை
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்பொழுது நடந்த ஒரு மின்னொடு விளையாடிய ஒரு நாள். பள்ளியில் ஜானகி மிஸ் எங்களுக்கு மின்காந்தம் பற்றி பாடம் எடுத்க் கொண்டிருந்தார். மறுநாள் அதன் செயல விளக்கம் காட்ட எங்களிடம் சில பொருட்களை வீட்டில் இருந்து எடுத்து வர சொன்னார். ஒரு இரும்பு ஆணி, செம்பு கம்பி, மின்கலன்கள் சில. பள்ளியில் முயற்சிக்கும் பொது தோல்வியல் முடிந்தது. அன்று மாலை வீடு வந்ததும் யோசித்தேன் மின்கலனில் மின் அளவு குறைவாக இருக்கும் ஏன் அதை வீடு மின் இணைப்பில் முயற்றிக்க கூடாது என்று செம்பு கம்பியை எடுத்து இரும்பு ஆணியில் சுற்றி ஒரு முனையை + மருமுனையை - கொடுத்து ஒரு பெரிய குச்சி கொண்டு சுவிட்சை போட்டுவிட்டு விளையாட சென்று விட்டேன். ஒருமணி நேரம் கழித்து சுவிட்சை ஆப் செய்து சோதித்து பார்த்த பொது எதுவும் மாற்றம் இல்லை. எங்கள் வீடு தவிர மற்ற பகுதியில் மின்சாரம் இருந்தது அப்பா வந்ததும் பியூசை மாற்றினார் மின்சாரம் வந்தது.
இதன் மூலமாக நான் கற்றது -ம் +ம் சேர்ந்தால் காந்தம் வராது பியுஸ் தான் போகும்.
எனது முதல் சைக்கிள் பயணம்:
இந்த அதி நவீன உலகில் ரிமோட் சைக்கில், கூகுல் சைக்கிள் வந்தாச்சு. நான் சைக்கிள் கத்துக்கொண்ட வயதில் என் தாத்தா சைக்கிள் தான் இருந்தது. மிகவும் கனமாக, ஓட்ட கடினமாகவும் இருக்கும். சைக்கிள் பழகும் பொழுது தனியாகத்தான் பழக முடியும். முதலில் தள்ளிக் கொண்டு ஓடினேன், மெல்ல பெடல் அடித்து கொரங்கு பெடல் ஓட்ட பழகியதும் மளிகை கடைக்கு போகும் வழக்கம் தொடங்கியது. ஒரு ஞாயிற்று கிழமை மதியம் பொதிகை டிவியில் ஒரு திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது விளம்பர் இடைவேளையில் நான் சைக்கிளை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் ஓட்டிவிட்டு மீண்டும் படம் பார்க்க வந்துவிடுவேன் இப்படியே நான்குமுறை செல்ல ஐந்தாவது முறை ஒரு சண்டைகாட்சி இடைவேளை கொஞ்சம் வேகமாக சைக்கிளை ஓட்ட திடிரென சைக்கில் பாறை தாண்டி காலை போட்டு விட கொஞ்சம் சந்தோசம் ஆனால் பேலன்ஸ் மிஸ் ஆக வாழை தோப்பு சேத்துக்குள் விழுந்தேன். இப்படி என் சைக்கில் பயணம் தொடர்ந்தது.
இப்படி கேரியரில் உட்கார்ந்து ஓட்டுவது ஒரு கெத்தாக அப்போது இருந்தது. ஆறாம் வகுப்புக்கு சைக்கில் பயணம் தொடர்ந்து எனது இளைநிலை பட்டம் பெறும்வரை சைக்கிளோடு பயணம் இருந்தது.
1999...
ஏ.சி மற்றும் டீ.சி ஆற்றலில் பரிசோதனை
ஒருமுறை ஏ.சி மற்றும் டீ.சி மின்சாரத்தில் சந்தேகம் வந்தது. ஏன் ஒரு ஏ.சி மின்சாரத்தில் இயங்கும் கருவி டீ.சி மின்சாரத்தில் இயக்க முடிவதில்லை ? முலையில் உள்ள ஆராய்சி பல்பு எரிய, அப்பா பைக்கில் ப்ரேக் பல்பை கலட்டி வீட்டில் இருந்த நூறு வாட்ஸ் பல்பை கலட்டிவிட்டு இருண்டு வாட்ஸ் பல்பை செட் செய்தேன். எந்த எக்ஸ்பிரிமெண்டா இருந்தாலும் ஒரு பயம் இருக்கும். பத்தடி தூரத்தில் இருந்த சுவிட்சை போட்டதும் பல்பு எரியல பதிலுக்கு வேடுச்சிடுச்சு.
மின்சாரம் அப்படின்னா என்ன ?
ஒளி என்பது ஒரு வகை ஆற்றல், ஒளியை புரோதான் (புரோட்டான்) துகள்கள் என்று சொல்லலாம். அனைத்து பொருள்களிலும் எலக்ட்ரான் என்ற மின்னணு ஒன்று உண்டு இந்த எலக்ட்ரானுக்கு கொஞ்சம் ஆற்றலைக் கொடுத்தால், அது இருக்கும் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும். இப்படி இந்த எலக்ட்ரான் ஓட்டத்தைதான் நாம் மின்சாரம் என்கிறோம். இந்த எலக்ட்ரான் ஓடுவதை தொட்டால் மரணம் தான் இது ஓடாமல் நின்றாலும் மரண வேதனைதான்.
மின்சாரம் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று ஏசி கரண்ட். இரண்டு ஜோடிகள் உள்ளன. இரண்டாவது டிசி கரண்ட் இதில் இரண்டு ஜோடிகள் உள்ளன. அதாவது பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் இங்கே ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் இந்த மின்சாரம் ஜோடியாகவே இருக்க வேண்டும் ஜோடியில் ஒன்று இல்லை என்றாலும் வேலைக்கு ஆகாது. இந்த ஜோடி ஒன்று சேர்ந்தால் தான் உருப்படியாக எதையும் செய்ய முடியும் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் இரண்டும் இருந்தால் தான் இயக்கவோ அல்லது செலுத்தவோ முடியும்.
AC மற்றும் DC மின்சாரம் என்றால் என்ன ?
AC - மின்சாரம்
AC (ALTERNATIVE CURRENT) மின்சாரம் என்பது ஆல்டர்னேட்டர் அல்லது ஜெனெரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாகும். குறைந்த இழப்பில் இதை நெடுந்தொலைவிற்கு கடத்த முடியும். இது கடத்தலுக்கு எளிமையாய் இருப்பதால் தான் தொழிற்சாலை வீடுகள் அனைத்திற்கும் இந்த AC மின்சாரம் பயன்படுத்தப்படுகின்றது. இந்த AC யை கடத்துவதற்கு செலவும் மிக குறைவு. நம் வீடுகளில் 220-வோல்ட்டுக்கு சிறிய அளவிலான சில்க் (Silk) வயரை பயன்படுத்தி அதாவது விலை குறைந்த கடத்தி / (wire) ஒயர்களை பயன்படுத்தி AC மின்சாரத்தை எளிமையாக கடத்தி விடலாம். ஆனால், இந்த வகை கரண்டை சேமித்து வைக்க முடியாது.
DC - மின்சாரம்
(DIRECT CURRENT) DC மின்சாரம் என்பது பேட்டரி (Battery) மற்றும் சோலார் (Solar) செல் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் மின்சாரம் ஆகும். DC மின்சாரத்தை நெடுந்தொலைவுக்கு கொண்டு செல்ல முடியாது. காரணம் மின் சிதைவு அல்லது இழப்பு (power loss) என்று சொல்லப்படும் மின்சார இழப்பு இந்த DC மின்சாரத்தில் ஏற்படும். ஆகவே, இந்த DC மின்சாரத்தை கூடங்குளத்தில் இருந்து ஒரு 500 கிலோவாட் அனுப்பினால் அது அதிராம்பட்டினம் வரும் போது 100 கிலோ வாட் தான் கிடைக்கும். ஆகையால் இந்த DC கரண்டை எந்த கடத்தல் மன்னராலும் நீண்ட தூரம் கடத்த முடியாது. மேலும், இதை கொஞ்ச தூரம் கடத்துவதாக இருந்தாலும் தடிமனான கடத்தி (Wire) வேண்டும் உதரணமாக கார் பேட்டரி 12 வோல்ட் அல்லது 24 வோல்ட் இருக்கும் அதற்கு தடித்த இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும் கவணித்துப் பார்த்தால் தெரியும். இந்த DC மின்சாரத்தில் ஒரு மிகப் பெரிய வரப்பிரசாதம் இதை சேமித்து வைக்கலாம்.
பொற்புழு இருந்து பட்டாம்பூச்சி வரை முதலில் பார்த்தது :
ஒருமுறை எங்கள் வகுப்பறைக்கு வெளியே இருந்த ஒரு செடி இலையில் ஒரு போர்புழு கூடு இருந்தது சிலநாட்கள் அதை கவனித்து வந்தேன். ஒருநாள் அதில் சிறு விரிசல் வர அந்த இலையை வகுப்பறைக்கு கொண்டுவந்தேன். நேரம் ஆகா ஆகா விரிசல் அதிகமானது. இறுதியில் உள்ளிருந்து பட்டாம்பூச்சி வந்தது சிறிது நேரத்தில் பறக்க கற்றுக்கொண்டது. இயற்கையின் ஒரு அற்புத காட்சி என் சிறுவயதில்
கராத்தே தற்காப்பு கலை:
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்பொழுது எங்கள் பள்ளியில் கராத்தே தற்காப்பு பயிற்சி வகுப்புகள் நடக்கும். எனக்கு அப்பொழுது தற்காப்பு பயிற்சி மிகவும் பிடிக்கும். பச்சை பெல்ட் வரை என் பயிற்சி தொடர்ந்தது. ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது பள்ளி ஆண்டு விழாவில் நான் தனியாக முன்றாம் நிலை கடாஸ் மேடையில் செய்து காட்டினேன். அதற்கு பெரும் முயற்றி செய்த எனது கராத்தே பயிற்சியாளருக்கு எனது நன்றிகள். கராத்தே என்பது ஒரு கலை அதை சண்டைக்கு பயன் படுத்த கூடாது.
"பரிசில் பங்கு" என் சிறுவயது மேடை நாடகம்
எல்லோருடைய வாழ்க்கையும் ஒரு மேடை நாடகம் தான் என்ன தப்போ சரியோ புதுசு புதுசா ஸ்கிரிப்ட் வந்துக்கிட்டே இருக்கும். நிஜ வாழ்க்கையைவிட அடுத்தவர் கதா பாத்திரத்தில் நடிப்பது கொஞ்சம் சிரமம் தான். ஒவ்வொருவர் மனதிலும் மேடை ஏறி மைக்கை பிடித்து பேசவேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். சரி அப்படியே ஒரு மைக் கெடச்சாலும் தனியா இருந்தா ஏதாவது பேசுவோம். நமக்கு முன்னாடி ஒரு பத்து பேர் இருந்தால் இரண்டு வரிகூட பேச்சு வராது. வாய்ப்புகள் கிடைப்பது கடினம் தான் ஆனால் கிடைத்த வைப்பை யார் பயன்படுத்திக் கொள்கிறார்களோ அவருக்கே பரிசு கனி கிடைக்கும்.
எங்க நாடகம் தென்னாலி ராமன் கதை தான் "பரிசில் பாதி பங்கு" ஐந்தாம் வகுப்பு படுச்ச எனக்கு ஒரு போயமை மனப்பாடம் பண்ண பலநாள் ஆகும் ஒரு பெரிய ஸ்கிரிப்ட் கொடுத்த என்ன பண்ணுறது. இருந்தாலும் ஒவ்வொரு நாடக ஒத்திகைக்கும் ரொம்ப மனப்பாடம் பன்னவேண்டியதாக இருந்தது. பள்ளி ஆண்டுவிழாவில் அரங்கேற்றமும் நடந்தது. கொபாலகிருஷ்ணன் தான் தென்னாலிராமன் நான் முதல் கதவு காவலன். என் கைக்கு மைக்கு வந்ததுமே ஒரு நடுக்கம் வந்தது. எஅதோ ஒரு தைரியத்தில் மேடை வந்துவிட்டேன். கோபால் என் பக்கத்தில் வர அவன் வசனத்தை சொல்லிமுடித்து விட எனக்கோ அங்கு இருந்த கூட்டத்தை பார்த்ததும் என் வசனம் எல்லாம் மறந்துவிட்டது. சிறிது அமைதிக்கு பிறகு கோபாலே ஓர் வசனம் சொன்னான் "என்னை உள்ளே செல்ல அனுமதிப்பாயா இல்லையா" பிறகு கூட்டத்தின் மேல் இருந்த கவனத்தை கோபாலை பார்த்தவாறே என் வசனத்தை சொல்லி முடித்து விட்டேன்.
2000...
எல்லார் வாழ்க்கையிலும் எங்காவது ஒரு பொற்காலம் இருக்கும். எனது ஏழாம் வகுப்பு மறக்க முடியாத பல நினைவுகளை கொண்டது. வெற்றியின் காலம் படிப்பில் வகுப்பில் இரண்டாவது ரேங்க், மூன்று விளையாட்டில் முதலிடம் ஒன்றில் இரண்டாம் இடம், கோ-கோ வெற்றி அணி, உடல் நலனில் அதிக முனேற்றம் கண்ட காலம். இரண்டாவது முறையாக ஒரு மேடை நிகழ்சியில் "தென்னாலி ராமன் பரிசில் பங்கு" என் பங்கு ஒரு சிறிய காவலர் கதாபாத்திரம் தான் ஆனால் மனதில் ஒரு ஆனந்தம் இருந்தது.
2001....
ஒவ்வொரு முலாண்டு விடுமுறையும் சின்ன பசங்களுக்கு கொண்டாட்டம் தான். விடுமுரைனாலே சொந்தகாரங்க ஊருக்கு போகலாம் அதிக நேரம் விளையாடலாம். எப்பவுமே மகிழ்சி அதிகமான அதற்கு இணையான சோகமும் வரும்
விடுமுறையில் ஒரு நாள் சுற்றுலா செல்லவதாக முடிவானது. பொள்ளாசியை நோக்கி பயணம் தொடங்கியது. தொடக்கம் என்னவோ நல்லாத்தான் இருந்தது மாசனியாம்மன் கோவில் போனோம் பக்கத்தில் சில இடங்கள் முடித்துவிட்டு பயணம் மீண்டும் தொடர்ந்தது சுத்தியும் தென்னை தோப்புகள் ஒரு பழைய ஓடு மேய்ந்த கட்டிடம் பிறகுதான் தெரிந்தது அது ஒரு பள்ளிகூடம் .
ஒரு முடிவோடதான் கூட்டிட்டு வந்திருக்குறாங்கனு தோனுச்சு விடுதி எல்லாம் சுத்தி பாத்துவிட்டு வேச்சங்கா ஒரு ஆப்பு என் எட்டாம் வகுப்பு என் ஊரையே எட்டி பாக்கமுடியாத தூரத்தில் இருந்தது
புதிய பள்ளி பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளி- பொள்ளாச்சி :
பழனியம்மாள் மேல்நிலைப் பள்ளி- வே.காளியாபுரம். என் வீட்டில் இருந்து தொண்ணூறு கிலோமீட்டர் தொலைவில் முதல் முறையாக யாரும் பழக்கம் இல்லாத ஒரு பெரிய கூட்டம் இருக்கும் இடம். அந்த உணர்வை வார்த்தையால் சொல்ல முடியாது யாரை நம்புவது, யார் என் நண்பன், அடுத்தது என்ன நடக்கும், அடுத்தது என்ன செய்ய வேண்டும், பல கேள்விகளும், பல குழப்பங்களும் மனதுக்குள் ஓடும். ப வடிவில் 36 அறைகள் அதற்க்கு எதிரில் ஒரு பெரிய உணவறை. மிரட்டல் பார்வையுடன் விடுதியில் மேற்பார்வையாளர் திரு செந்தூரப்பாண்டியன் அவர்கள். முதால் நாள் மதியம் என்னை விடுதியில் விட்டு சென்றனர் என் பெற்றோர்கள். புதுசா சேரும் பசங்கள பழைய பசங்களோட சில மாதம்ங்கள் சேரவிடமாடாங்க. அதனால எனக்கு முதல்ல நண்பர்களானது 4,5,6 வகுப்பு பசங்கள் தான் அதிலும் லோகேஷ், சசிகுமார் நல்ல நண்பர்களாக இருந்தாங்க. விடுதியில விடவரும் மற்ற பெற்றோர்கள் என்கிட்ட வந்து அவங்க பசங்கள பத்திரமா பாத்துக்கனு சொல்லுவாங்க என் மனசுக்குள்ள "என்ன பாத்துக்கவே யாரு இருகுராங்கனு தெரியல"
விடுதி வாழ்கை:
வீட்டுல சாப்பாடு நேரம் ஆனதும் அம்மா என்னை சாப்பிடவானு பலமுறை கூப்பிட்டாலும் சாப்பிட வரமாட்டேன் ஆனா விடுதி அப்படியில்லை அங்க எல்லாம் மணி ஓசை தான் அதற்று நாம் பதில் இல்லை என்றால் பிரம்படிதான் கிடைக்கும். 300 ஸ்பர்டர்கள் போல 300 பசங்க அந்த விடுதியில் இருந்தோம். அதிகாலை 5 மணிக்கு ஒரு நீண்ட மணியடிக்கும் அதுதான் அந்த விடுதுக்கே காலை அலாரம். அடுத்த ஐந்து நிமிடத்தில் விடுதி வாடன் கையில் ஒரு கொண்டை குச்சி பெரம்புடன் வலம் வருவார். அந்த நேரம் தூங்குபவர்கள் அலாரம் பெரம்படிதான். காலை கடன்களை முடித்துவிட்டு 5.15க்கு அடுத்த மணியடிக்கும் டம்ளரை எடுத்துகொண்டு உணவறைக்கு வந்துவிட வேண்டும் ப்ரு காப்பி சில விடுதி மாணவர்கள் பரிமாற 5.30க்கு அடுத்த மணி கையில் ஒரு பாட புத்தகத்துடன் வரிசையில் உணவுவிடுதியில் படிக்கும் நேரம்.
7.30 அடுத்த மணி குளிப்பதற்கு அடுத்தது 8 மணிக்கு காலை உணவு சன் செய்திகளுடன். 9 மணிக்கு பள்ளி தொடங்கும். மாலை 5க்கு பள்ளி முடிய ஒரு மணி நேரம் விளையாட்டு கண்டிப்பாக ஒரு விளையாட்டில் இருக்க வேண்டும். 6 மணிக்கு ஒரு மணி சத்தம் கேட்கும் எங்கு இருந்தாலும் விடுதியில் இருக்க வேண்டும் 6.15 மணி ஒரு வரிசைக்கு 20 என்ற எண்ணிகையில் அமரவேண்டும் ஒரு தேசபக்தி பாடல் முடிந்ததும் தலை எண்ணிக்கை தொடங்கும். 6.30முதல் படிக்கும் நேரம் 8 மணிக்கு மணி அடித்ததும் இரவு உணவு சன் செய்திகளுடன். 9 மணி முதல் மீண்டும் படிக்கும் நேரம். இரவு சரியாக 10 மணிக்கு ஐந்து நிமிடம் மின் துண்டிப்பு இருக்கும் அது முடிந்ததும் உறங்கும் நேரம்.
ஒரு கொடுமையான சிறை வாழ்க்கை தான் இந்த விடுதி வாழ்கை. இது தொடக்கத்தில் மிக கடினமாக இருந்தாலும் ஆறு மாதத்தில் பழகிவிடும் ஆனால் அதை விட கொடுமையானது வார விடுமுறையாகும் ஞாயிற்றுகிழமை தான். மதியம் 12 முதல் மாலை 6 வரை நீடிக்கும் அந்த போராட்டம் தான் பெற்றோர் சந்திப்பு. மாதம் ஒருமுறை என் பெற்றோர் யாராவது வருவார்கள். வந்தால் அந்த நாள் இனிய நாளே. இல்லை என்றால் அந்த மன போராட்டம் அனுபவபட்டவர்களுக்கே தெரியும்.
விடுதி வாழ்கை மூன்று வருடம் நான் கற்றுக்கொண்டதோ பல
1. என் வேலைகளை நான் தான் செய்ய வேண்டும் யாரும் உதவ மாட்டார்கள். படுக்கையை சரிசைதல், துணி துவைத்தல், பாடபுத்தகங்களை சரிபடுத்துதல், பேனாக்கு இங்க உத்துவது, சூ பாலிஸ் போடுவது, டை கட்டுவது, உணவு தட்டுகளை சுத்தம் செய்வது, மற்றும் பல.
2. சிறு தவறுகளுக்கு தண்டனை அதிகமாகத்தான் இருக்கும். இரண்டு வலிகளையும் (உடல் மற்றும் மன) அனுபவித்தே ஆகா வேண்டும். ஓடி பிடித்து தொட்டு விளையாட்டுக்கு கூட அதிக நாள் அடி வாங்கியது அதிகம்.
3. என்ன சோர்வாக இருந்தாலும் மணி ஓசைகள் தாமதிக்காது. அதன் வேகத்தோடு ஓடியே ஆகா வேண்டும். பிறகு பாக்கலாம் என்பதற்கு வாய்புகள் இல்லை.
4. உணவு பிடிக்கவில்லை என்றலும் சாப்பிடே ஆக வேண்டும். எனக்கு பாவக்காய், முள்ளைங்கி, வாழை தண்டு, கீரை பிடிக்காது. அனால் இப்போது அது தான் மிகவும் பிடித்ததாகி விட்டது.
5. குழந்தை வாழ்வை மறந்து ஒரு எந்திரம் போல மாறிவிடுவோம். பலநேரம் சிறைஎன்றே தோன்றும்.
6. நம் விருப்பங்களும் கற்பனைகளும் கல்லாக மாறிவிடும். விடுதி ஞாயிற்றுகிழமைகள் போல.
7. 8 மணி செய்தி பார்க்கும் வழக்கம் ஆகும்.
8. விடுதிகளில் உணவுகள் பரிமாறுவது சுத்தம் செய்வது அனைத்தும் நாங்கள் தான் ஆறு குழுக்கள் இருக்கம் தினம் ஒரு குழு அதற்கு ஒரு தலைவர் 11 வகுப்பில் ஒருவர் துணை தலைவர் 9 ஆம் வகுப்பில் ஒருவர். வருடம் ஒருமுறை தலைவர்கள் மாறுவார்கள். தலைவர்களுக்கு அதிக வேலை இல்லை என்றாலும் குழுவில் யாரவது தவறு செய்தால் தலைவருக்கு தான் தண்டனை.
9. காசுகள் சேமிக்கும் பழக்கம் வரலாம். நான் அதிகம் செலவுகள் செய்யமாட்டேன். சேமிக்கும் பணத்தை என் அம்மாவிடம் குடுத்துவிடுவேன்.
10. கடிதம் எழுதும் பழக்கம், எழுத்து பிழை இருக்கும் என கவலை படக்கூடாது. 11. இயற்கையை நேசிக்கலாம். தனிமையில் இருக்கும் பொழுது மனசோர்வை கலைக்கும் இயற்கை மலைகள், மரங்கள்.
12. தனிமை வாழ்க்கை. உறவுகளிடம் பழகுதல் குறையும். வெளியுலகம் மறக்கும். சொந்த ஊரில் இருக்கும் மாற்றங்கள் ஆச்சரிய படுத்தும்.
13. மறந்துவிடுதல், ஊர் திருவிழாக்கள், குடும்ப நிகழ்சிகள், பழைய நண்பர்கள் பிறந்தநாள்.. வருடம் ஒருமுறை வரும் தன் பிறந்த நாளுக்கு கூட பெற்றோர் வாழ்த்து இருக்காது எதிர் வரும் ஞாயிறு வரை காத்திருக்க வேண்டும்.
இந்த சின்ன கோவில் விநாயகர் தான் விடுதி மாணவர்களுக்கு ஆறுதல் சாமி. கஷ்டங்களை கொட்டி தீர்த்தும் மகிழ்சியை பகிர்ந்து கொண்டும் செல்லும் மாணவர்களை மொனமாக பார்த்தவாறு அருள் தருபவர்.
ஆசிரியர்கள்
மாணவர்கள் சிறந்தவர்களாக இருப்பதற்கு ஆசிரியர்களுக்கு மிகபெரிய பங்கு உண்டு. எனது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் வணக்கங்களும் நன்றிகளும். ஆசிரியர்களில் எனக்கு பிடித்தது திரு ரமேஸ் அவரும் ஒருவர். சமூக அறிவியல் பாடம் எடுத்தார். எல்லாருக்கும் வரலாறு கதை சொன்னால் கடுப்பாக இருக்கும் ஆனால் இவர் பாடம் எடுத்தால் அந்த கதைக்குள் நம்மை எடுத்து சென்றுவிடுவார். அதிகமாக ஹிட்லர் கதைகள் சொல்லுவர் அதனாலே என்னவோ எனக்கும் ஹிட்லரை பிடித்துவிட்டது. படிக்கவில்லை என்றால் நாங்கள் அவரிடம் வாங்கும் அடிகளுக்கும் பஞ்சம் இருக்காது இருந்தும் அவர் மாணவர்கள் மீது அதிக பாசம் கொண்டவர். அவர் பாடம் எடுக்கும் பொழுது மாணவர்கள் கண்டிப்பாக பாட புத்தகம் கையில் இருக்ககூடாது மாறாக எங்களை சிறு குறிப்புகளாக எழுதவேண்டும் என் சொல்வார், பாட முடிவில் ஒருவர் தான் எழுதிய குறிப்பை வைத்துக்கொண்டு பாடத்தை சொல்ல வேண்டும். முன்று தர மாணவர்களாக பிரித்து தேர்வு வைப்பார். முதல் தரத்தில் இருப்பவர்கள் ஒரு கேள்வி முழுவதும் படித்துவிட்டு பாக்காமல் எழுதவேண்டும் இரண்டாம் தரம் ஒருகேள்வி விடையை இரண்டு பாகமாக பிரித்து படித்து எழுதவேண்டும் முன்றாம் தரம் அந்த கேள்வி விடை எத்தனை வரிகள் நினைவில் இருக்கிறதோ அதை மட்டும் பாக்காமல் எழுதவேண்டும். முதலில் நான் முன்றம் தரத்திலிருந்து இரண்டாம் தரம் வந்தேன் பத்தாம் வகுப்பு தேர்வில் 95% மதிப்பெண் பெற்றேன். மார்க்கை பார்த்ததும் அடைந்த மகிழ்சிக்கு அழவே இல்லை, இது ஆசிரியர் திரு ரமேஸ் அவர்களுகே சமர்பனம்.
முதல் இரசாயன கோவில்:
ஆசிரியர் திரு விஜயகுமார் எனக்கு அறிவியல் பாடம் எடுத்தார். எங்கள் பத்தாம் வகுப்பு ஆசிரியரும் இவரே, எப்பொழுதும் முதல் வகுப்பு அறிவியல் பாடம் தான், சொல்லவே வேண்டாம் விடுதியில் அதிகாலை கலைந்த தூக்கம் வந்துவிடும் அவரை ஒன்னும் குத்தம் சொல்ல முடியாது பத்தாததுக்கு மதிய உணவுக்கு அடுத்தது அறிவியல் வகுப்பு என்றால் என் தூக்கத்தை நிறுத்த எனக்குள் ஒரு பாரத போறே நடக்கும். எனக்கு அறிவியல் பிடிக்க காரணம் அதில் செய்யும் மாயஜாலம் தான். ஒருமுறை பள்ளியில் அறிவியல் கண்காட்சிக்கு ஏற்பாடுகள் செய்தனர். சிலர் மோட்டார் வைத்து தன் படைப்பை செய்தனர். சிலரோ இலை தலை வைத்தனர். ஒருவன் மட்டும் ரசாயனம் உதவியள் எரிமலை செய்தான். எனக்கோ என்ன செய்வது என்று தெரியவில்லை எனக்கு துணையாக இன்னொருவனும் இருந்தான், அவன் பெயர் தான் இப்போ ஞாபகம் இல்லை ஆசிரியர் திரு விஜயகுமார் அவர்களிடம் யோசனை கேட்டோம் அவர் ரசாயனம் வைத்து வண்ணங்கள் வரவைக்க முடியும் என்றார். பள்ளி கோவிலில் யோசிக்கும் பொது சாமிக்கு பூஜை நடந்தது அதை கருவாக வைத்து ரசாயன சாமி பூஜை திட்டம் கிடைத்தது. நாலு குடுவையில் நாலுவிதமான ரசாயனம் முதல் இரண்டை சாமி சிலை மீது ஒன்று சேர்ந்ததும் வெள்ளை நேரமாக மாறும் அடுத்த இரண்டை சேர்க்கும் பொழுது சிவப்பாக மாறும் அடுத்த இரண்டை சேர்க்கும் பொழுது மஞ்சலாகமாரும். கடைசியில் அந்த சாமியை சுத்தம் செய்யவே முடியவில்லை.
நாம் கத்துக்கும் அறிவியல் நம் வாழ்கையில் எங்காவது உதவும். இப்போ நான் கொழம்பு வெச்சா உப்பு காரம் சரியா இருப்பது போல...
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லட
ஆசிரியர் திரு சாமுவேல் கனகராஜ் எனக்கு தமிழ் ஆசிரியர், என்னடா இவன் உயிர் மெய் எழுத்து அட்டவனையை போட்டிருகானு பயப்படாடிதீங்க சொன்ன நம்ப மாட்டிங்க பத்தாம் வகுப்புல இந்த அட்டவனையை வச்சு ஒரு தேர்வே எழுதுனோம். என் கோழி கிறுக்கல் எழுத்த பாத்துட்டு என்கிட்ட ஒருநாள் அவர் சொன்னார் "உன் எழுத்த ஏதாவது கல்வெட்டுல எழுது அதபாத்திட்டு போறவங்க எதோ சுமேரிய எழுத்துன்னு ஆராய்சி பன்னுவாங்க" அதனால நான் எழுதுற தமிழ் பிழைகளை ஆசிரியர் திரு சாமுவேல் கனகராஜ் அவர்களுக்கே சமர்ப்பணம் (நகைச்சுவைக்கு மட்டும் எடுத்துக்குங்க).
பத்தாம் வகுப்பு என்னுடம் படித்த நண்பர்கள்.
M.Moulishankar,
M,Prabhu,
N.Parthiban,
R.Ravishankar,
D.Rajkumar,
J.Sureshbabu,
S.Sethu,
A.S.Karthik,
M.Ponraj,
N.Nandhakumar,
R.Prabhu.
நான் பத்தாவது பாஸ்
2003 பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அடுச்சு பிடிச்சு பாஸ் ஆனது எதோ ராமாயன் காவியம் முடிந்தமாதிரி ஒரு திருப்தி .
ஒருவழியா விடுதி வாழ்கை முடிவுக்கு வந்தது. எங்கள் புது வீட்டு வேலைகளும் தொடங்கியது.
2003 ராயர் கல்வி நிலையம் - அவினாசி , எனது 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு இங்குதான் தொடர்ந்தது.
என் உயிர் நண்பன்
தரமான நட்பு என்பது அடர்ந்த மரக்கிலைகளைப் போன்றது எவ்வளவு கிலைகளை வெட்டப்பட்டாலும் மீண்டும்மீண்டும் புத்துணர்வோடு வளந்துக் கொண்டே இருக்கும்.
புது பள்ளி வாழ்க்கையோடு சேர்ந்து ஒரு புது நண்பன் உறவு கிடைத்தது. கிச்சா என்கிற V.Krishnakumar எல்லோர் வாழ்கையிலும் ரகசிய டைரி ஒன்னு இருக்கும் சிலர் எழுதி வைத்திருப்பார்கள் சிலர் தனக்கு நெருக்கமானவரிடம் சொல்லி வைப்பார்கள் அப்படிப்பட்ட என் டைரினு சொல்லலாம். என் சோகம், இன்பம், துன்பம், ஆசை, கனவு, சில ரகசியங்களும் இருக்கும் (டேய் கிச்சா யார் கேட்டாலும் சொல்லிடாதே அடுச்சு கூட கேப்பாங்க). முதல்நாள் முதல் இன்றுவரை எங்கள் இருவருகிடையில் எதோ ஒரு புரிதல் பந்தம் தொடர்கிறது. நட்பாக தொடர்ந்த எங்கள் நட்பு இன்றோ ஒரு உறவாகியது. மணிக்கணக்கில் நாங்கள் பேசுவோம் பேசாத தலைப்பே இருக்காது, அதிகமாக எண்ணிடம் வம்பிளுபான் பலமுறை சண்டைகள் வந்தாலும் சிறிது நேரத்தில் சேர்ந்துவிடுவோம். அதிகமாக வர-டீ தான் எங்கள் பேக்கரி உணவு. நண்பர்கள் திருமணம் என்றால் கண்டிப்பாக அவனுடன் தான் சேர்ந்து போவேன்.
பனிரெண்டாம் வகுப்பு பள்ளி தொடங்கிய முதல் வாரம், இரண்டாவது பெஞ்சில் தான் இருந்தேன் ஒரு ஆசிரியல் நான் உயரமாக இருப்பதால் கடைசி பெஞ்சுக்கு போக சொன்னார். அப்போ அவன் பக்கத்துல எனக்கு அமர இடம் கொடுத்தான் அப்போ தொடங்கிய அவன் நட்பு பனிரெண்டாம் வகுப்பு முடிந்ததும் நங்கள் இருவரும் ஜி.ஆர். தாமோதிரன் கலை அறிவியல் கல்லூரியில் கணினி அறிவியல் இளங்கலை பாடப்பிறிவில் சேர்ந்தோம் அப்போதும் பக்கத்து பெஞ்சியில் அவன்தான். மூன்று வருடங்கள் ஓடின. முதுநிலை பட்டம் அவன் வேறு கல்லூரியில் சேர்ந்தான்.
இரண்டு வருடத்தில் பட்டமும் பெற்றோம். அவன் தன் தந்தை தொழிலை தொடர்ந்தான். அவன் வீட்டு அணைத்து நிகழ்சியிலும் நான் இருப்பேன். அவனுக்கு பிடித்தது ஏதாவது அவன் வாங்கினால் என்னையும் வாங்க வைத்து விடுவான். அப்படி வாங்கியது முதல் கைபேசி ஜி5-யு 800, அதிகம் மறந்துவிட்டது சமீபத்தில் என்னை வாங்க வைத்தது ராயல் என்பில்டு புல்லட் 350 எலெக்ட்ரா.
எனது பள்ளி நண்பர்கள்
டி.வி.எஸ் சாம்ப்:
பதிநோன்னாம் வகுப்பு முழுவதும் பள்ளிக்கு டி.வி.எஸ் சாம்பில் தான் என் பயணம் இருந்தது. ஒரு வருடத்தில் மூன்று முறை என்ஜினை ஜாம் செய்துள்ளேன் பெட்ரோல் பங்கில் பெற்றோல் போட்டாதானே ஆயில் போடுவோம் பாதிநாள் அப்பா வண்டி பெட்ரோல்ல தானே ஓடுச்சு.
எனது முதல் கணினி
2004 எங்க அப்பா நிருவனத்திற்கு ஒரு கணினி வாங்கினார் HCL BusyBee Desktop PC windows 95 சிலவருடத்தில் என் கைக்கு வந்தது. எனது வாழ்வின் ஒரு திருப்புமுனையாக இருந்தது இந்த கணினி. முதல்முதலில் நான் பையன்படுத்தியது MS Paint இந்திய தேசிய கொடிதான் என் முதல் வண்ணம் தீட்டிய ஓவியம். கணினி விளையாட்டில் கொஞ்சம் ஆர்வம் அதிகம். ஒருமுறை கணினியில் தேவை இல்லாத கோப்புகள் எதுவென்று தெரியாமல் உருவம் இல்லாத கோப்புகளை அழிக்க மறுநாள் சர்வீஸ் ஆட்கள் சரிசெயததும் தான் தெரியும் உருவம் இல்லாத அனைத்தும் துணை கோப்புகள் என்று. புதிய இயங்குதளம் போடும்பொழுது நான் கவனமாக பார்த்து பிறகு நானே இயங்குதளம் பதிவேற்ற கற்றுக்கொண்டேன். விண்டேஸ் 95 இயங்குதளம் தற்போதைய இயங்கு தளம் விண்டோஸ் XP, Vista, 7, 8, 10 போல எளிதல்ல பிளாப்பி டிஸ்க் கொண்டு பூட் செய்து சில டாஸ் காமேண்டுகள் கொடுத்து பிதான் பதிவேரும். இதற்காகவே சில டாஸ் கமெண்டுகளை கற்றேன். பின் disk partition, fragmentation, disk scan எல்லாம் பையன் படுத்தினேன்.
2005 ஒருவழியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேறிவிட்டேன்.
டிப்ளமோ படிப்பு:
என்ன தான் கணினியை நாம் தனியாக கற்றாலும் சில நுணுக்கங்களை கற்க ஒரு சான்றிதழ் படிப்பு முக்கியம். பன்னிரெண்டாம் வகுப்பு விடுமுறையில் D.O.A சான்றிதழ் பெற்றேன்.
முதல் கல்லூரி வாழ்கை
ஒரு வழியாக இளைநிலை பட்டபடிப்பு கணினி துறையில் ஜி.ஆர்.தாமோதிரன் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்தேன். தனிய எப்படி போறதுனு என் நண்பன் கிருஷ்ணாவையும் இங்கு சேரவைத்தேன். என் துரதிஷ்டம் இங்கும் விடுதியில் சேர்த்துவிட்டனர். ஒருவருடம் ஓடின என் முழு குறிக்கோள் படிப்பில் இல்லை எப்படியாவது என் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்பதே 52கிலோவில் இருந்து ஒரு வருடத்தில் 70கிலோவுக்கு மேல் சென்றுவிட எனக்கே என் எடையில் கொஞ்சம் பயம் வந்தது. உடல் எடையை அதிகரிப்பது சுலபம் ஆனால் அதை குறைக்க பல தியாகம் செய்யவேண்டும்.
புதிய நட்புகளும் சேர ஓரறை தோழர்களாக முதலில் சந்தித்தது பரத்முத்து கிருஷ்ணன். விடுதி முதல் நாள் என் பெற்றோர்கள் இவனிடம் தான் என்னை பத்திரமாக பாத்துக்க சொன்னார்கள், சில மணி நேரத்தில் அவனை கீழே தள்ளி அவன் கால் சுளுக்கியது மறக்கமுடியாத ஒரு நிகழ்வு. ஒருமுறை ரூமில் ரெஸ்லிங் விளையாட என்னைவிட எடை அதிகம் உள்ள பரத்தை அலேக்காக தூக்கி கட்டள்மீது போட்டேன் எனக்கே ஆச்சரியம் எனக்குள் இவ்ளோ சத்தியானு.
(பால் டப்பா) சுஜித் என் இரண்டாவது ரூம்மேட் இவர்கள் பெற்றோன் எண்ணிடம் இவனை பத்திரமாக பாத்துக்க சொன்னாங்க. நல்ல படுகா டான்ஸ் ஆடுவான். ஒருமுறை அவன் குளிக்கும்பொழுது வெளி தாழ்பாள் போட்டு சென்றுவிட்டேன் பையன் ரொம்ப டென்சன் ஆய்ட்டான்.
(ஜல) சரவணன் கொஞ்சம் அமைதியானவன் கொஞ்சம் அட்டக்கசமும் பண்ணுவான்.
(மொக்க ஜி) அரவிந்த் எப்போதும் ஒரு மொக்க வாங்குவது வழக்கம். நாங்கள் அன்போடு ஜினு கூபிடுவோம். எல்லா தேர்விலும் எனக்கு பின்னாடி இருப்பான்.
(நாய் சேகர்) ராஜேஷ், ஓவர் பில்டப் கொடுப்பான். குரூப் போடோக்கு வெல்ல சட்ட போடசொன்னா இவன் கருப்பு சட்டை போட்டுட்டு வந்தான். பைக் ரேஸ் பிரியன், ஒரு பஜாஜ் பல்சர் இருந்தது அதில் பண்ணாத சேட்டை இல்லை, எப்போதும் ட்ரிபிள்ஸ் தான் சித்ரா சாலையில் இரண்டு பஸ்சுக்கு இடையில் செல்வது, ராங் சைடு வண்டி ஓட்றது, இவனுக்கு பிடித்த நம்பரை வண்டி நெம்பராக போடுவது. டிராபிக் போலீஸ் லத்தியை சுட்டது, டீ குடிக்க கேரளா செல்வது, கேரட் சாப்பிட ஊட்டி செல்வது, கேம்பஸ் இண்டர்வியு கூட்டிட்டு போறேன்னு சொல்லீட்டு எல்லாரையும் ஊர் சுத்த செய்வது.
பக்கத்து ரூமில் இருந்த (கருங்குஞ்சு) அருண் ஜெயா பிரகாஷ், எதற்கு நாங்கள் சண்டை போடுறோம் என்கூட தெரியாது. ஒருமுறை என் மூக்கை உடைத்துவிட்டான் எனக்கோ ரத்தம் நிக்கவில்லை அவன் பதரிப்போய் எனக்கு முதலுதவி செய்தான்.
கல்லூரி விடுதி வாழ்க்கை என்பது ஒரு சொர்க்கம் தான். என்ன தான் விதிமுறைகள் பல இருந்தாலும் அதை மதிப்பது இல்லை. குடிக்க நல்ல தண்ணீர் இருந்தால் அதில்தான் நாங்கள் குளிப்போம், மெஸ்ல டீக்கு பெயர் கொடுத்திட்டு பூஸ்ட் குடிப்போம், இரவு 9 மணிக்கு படிக்கும் நேரம் ஆனால் நாங்கள் அப்போது தூங்கிவிடுவோம், வீட்டுக்கு போக வேண்டுமென்றால் விடுதி காப்பாளரிடம் அனுமதி கடிதம் வேண்டும் அனால் நான் ஒருமுறைகூட வாங்கியது இல்லை.
ஜாவா வளர சிம்பில்:
ஜாவா படித்தால் போதும் வாழக்கை செட்டில், ஆனா அது நம்ம மண்டைல ஏறுமா. செய்முறை தேர்வு படிக்கவில்லை என்றாலும் ஏதாவது எப்படியாவது முடிக்க வேண்டும். இறுதியாண்டில் எனக்கு வந்த ஜாவா செய்முறை கேள்வி குழந்தைகளுக்கு போடும் ஊசி தேதிகளை சொல்வது. 110 வரிகளுக்கு மேல் இதற்கு கோடிங் வரும். ஒரு குழந்தை பிறந்த தேதியை கொடுத்தால் அடுத்து ஊசி போடும் மூன்று தேதிகள் வரவேண்டும். நானும் ஒருமணிநேரம் போராடி பிழைகளே வந்தது. அப்போது தான் இந்த ஐடியா கிடைத்தது விடையில் ஏதாவது மூன்று தேதிகள் தானே வரவேண்டும். எந்த தேதி குடுத்தாலும் நான் கொடுக்கும் விடை தான் வரும். 8 வரிகளில் முழு கோடிங்கையும் முடித்துவிட்டேன்.
public class Baby Vaccination {
public static void main(String[] args) {
System.out.println("Child Birth : 03:12:1986");
System.out.println("First Vaccination : 20:03:1987");
System.out.println("Second Vaccination : 18:07:1987");
System.out.println("Third Vaccination : 16:04:1989");
}
}
நீங்க வேணா இத ரன் பண்ணி பாருங்க..
என் முதல் கைப்பேசி:
இளநிலை பட்டம் மூன்று ஆண்டுகள் முடியும் வரை எண்ணிடம் கைபேசி இல்லை. 2008ல் புதுவராவான மோடோரோலா எல் 9 இதை வாங்க எத்தனை தியாகம் இருந்தது என்றால் அனைவரும் சென்ற கல்லூரி சுற்றுலாவிற்று போகவில்லை, பல மதிய உணவு, இரண்டு பேருந்து நிறுத்தம் முன்பே இறங்கி நடப்பது. முதல் முதல் இந்த கைபேசியை என் கையில் பிடித்ததும் அடைந்த மகிழ்சிக்கு எல்லையே இல்லை. அதில் எடுத்த பல புகைப்படங்கள் இன்றும் அந்த கால நினைவுகளை நிலை நிறுத்துகிறது.
முதுநிலை பட்ட படிப்பு:
2008 M.B.A பார்க் பொறியியல் கல்லூரி - கணியூர்.
இந்த கல்லூரி சேரும் முன்பு ஒரு தேர்வு இருந்தது நானும் மும்மரமாக எழுதிக் கொண்டிருந்தேன், எனக்கு பின்னால ஒரு கை அழைத்தது திரும்பி பார்த்தல் (பிளேக் பெரி)குருமூர்த்தி கீழுள்ள புகைப்படத்தில் முதல் இருப்பது. அவனுக்கு பக்கத்தில் குழந்தை முகத்துடன் இருந்தது (குண்டன்) கார்த்திக் புகைப்படத்தில்கூட அப்பாவிபோல கைகட்டி என் பக்கத்தில் நிக்குறான். நடுவுல நிக்குறது (பாட்னர்)வினோத் என்ன பாடா படுத்துனவன்.
ஏகப்பட்ட மாஸ் பங்க் அடிபோம் குறிப்பாக நண்பர்கள் பிறந்தநாள் என்றால் ஒரு குரூப் இருக்காது.
Karthi(குண்டன்),
Umadevi(Bonda)
என் மடிகணினி Acer 4750. அதிக நேரம் இதில் தான் செலவானது, விளையாட, படம் பார்க்க, பாட்டு கேக்க. படிக்க மட்டும் இது பயன்படவேயில்லை. புதுவரவு மென்பொருள், புதிய பாடல், புதிய படங்கள் என எப்போது கோப்புகள் புதுப்பித்து கொண்டு இருப்பேன். இறுதியாக 2015 ஒரு நாள் மதர்போர்ட் செய்யலிலந்த்து.
இளைய சகோதரன் மறைவு:
13 பிப்ரவரி 2009 என் வாழ்வின் மிக துயரமான நாள். என் இளைய சகொதிரன் நரேந்திரகுமார் இந்த பூமியை விட்டு பிரிந்தான். மிகவும் அமைதியானவன், பள்ளி விடுமுறைகளில் எங்கள் அமுச்சி வீட்டில் இவன் வருகைக்காக காத்திருப்பேன், ஒன்றாக விளையாடினோம் இன்று அவன் இல்லை நினைவுகள் மட்டும் இருக்கிறது.
Mr.R.S.Mohan, எங்கள் செட்டில் இவரை யாராலும் மறக்க முடியாது, எங்கள் வழிகாட்டி, நான் இருந்த குழு தலைவராக இருந்தார், ஆசிரியராக இல்லாமல் ஒரு நண்பராக இருப்பவர். கல்லூரி காலங்கள் முடிந்தும் இன்றும் தொடர்பில் இருப்பவர்.
Mr.Amalraj stalin, இவர் வகுப்பில் ஒருவன் தூங்கினான் என்றால் அது சரித்திரமே, கின்னஸ் சாதனை புரிந்தவர்.
Mrs Meera இறுதியாண்டு என் ப்ராஜெக்ட் வழிகாட்டியாக இருந்தவர்.
அந்த கடைசியில ஒரு கூடம் இருக்கு பாருங்க. அதிக நாட்கள் இப்படி தான் நின்னோம்.
எனது முதல் பதிவு பக்கம் :
6 டிசம்பர் 2009 BusyBee4U என்ற இணைய பக்கம் தொடங்கினேன், முதலில் மேன்போருகுக்காக பதுவுகள் போட்டேன், நாட்கள் செல்ல செல்ல பதிவுகளும் தலைப்புகளும் அதிகமானது, இதற்காக xml கோடிங்குகள் சில படித்தேன். 2016'ல் 5000 பதிவுகளுக்கு மேல் சென்றுவிட்டது.
என் முதல் பல்லூடக படம்
2010'ல் எங்கள் கல்லூரி குழுவிற்கு ஒரு மேடை நாடக தலைப்பு கொடுத்தார்கள், முகமூடி"The Mask". ஒவ்வொரு குழுவும் முகவும் ஆர்வமுடன் தங்கள் மேடை திரைக்கதையை உருவாக்கினர். எங்கள் குழு என்ன செய்வது என்று தெரியாமல் நின்றோம். அப்போது முத்துகிருஷ்ணன் சொன்ன பங்கு சந்தை கலக்கிய ஹர்ஷத் மேத்தா கதையை தயார் செய்தோம் இறுதியில் கைவிடோம். நாங்களே ஒரு புதிய கதையை உருவாக்கினோம் பொருளாதாரம் பெரும் பின்னடைவு கண்ட 2009. ஒரு வேலையிலா பட்டதாரி கதை. எங்கள் குழு தலைவர் திரு . மோகன் அவர்கள் குழு உறுபினர்கள் கார்திக், முத்துகிருஷ்ணன், டென்சில், ஆனந்த பிரியா, சுதிஷா, ஜான்சி, சேனி,
எங்கள் கதை சுருக்கம்
கதையின் நாயகன் பட்டபடிப்பு முடித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் நல்ல நிலையில் இருப்பவன், பொருளாராத வீழ்சி காரணமாக வேலை பறிபோகிறது. வேலை தேடி எங்கும் கிடைக்கவில்லை ஆகையால் எதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்னும் நிலைக்கு வருகிறான் அப்போது வேலை இல்லை ஒருநாள் தன் கல்லூரி ஆசிரியரை எதர்ச்சியாக சந்திக்க இவன் நிலையைப் பார்த்து வருத்தப்பட்டார் "உனக்குள் ஒரு திறமை இருக்கு அதை வெளிக்கொண்டுவா" ஆறுதலாக நீ ஏன் வேலை தேடுகிறாய் நீ பிறருக்கு வேலை கொடுப்பது போல யோசி என சொல்லி விடைபெறுகிறார்.
குழப்பத்தில் இருந்த நாயகனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை தொழில் தொடங்க முதலீடு வேண்டும் தன்னை நம்பி யாரும் முதலீடு பண்ணமாட்டார்கள் என்று யோசித்தவாறு தெருவில் செல்கிறான். வழியில் ஒருவர் ஒரு மருத்துவமனைக்கு முகவரி கேட்டக அவருக்கு என்ன பிரச்சனை என கேட்டு இதற்கு சிறப்பு மருத்துவர் ஒருவர் இருக்கிறார் என்று அவனுக்கு தெரிந்த மருத்துவமனையை சொல்ல அதே போல அந்த வழியாக வந்த சிலருக்கும் சொல்ல ஏன் இதை கருவாக வைத்து ஏதாவது செய்யலாம் என் யோசனை வர சில மருத்துவர்களை சந்தித்து அவர்கள் கருத்துகளையும் கேட்டு ஒரு முடிவு செய்கிறான் மருத்துவருக்கும் நோயாளிகளுக்கும் ஒரு எளிய தொடர்பு வேண்டும் என்று என்னி கணினி பொறியாளனான தன் நண்பன் ஒருவனிடம் உதவி கேற்க அவனோ ஒரு டீல் சொல்கிறான் உனக்காக நான் ஒரு இணையத்தளம் செய்து தருகிறேன் அதற்கு தகவல்களை மட்டும் நீ சேகரித்தால் போதும் லாபத்தில் ஒரு பங்கு எனக்கு கொடு என் டீல் சொல்ல அதையும் நாயகன் ஒத்துக்கொள்ள. "THE MASK" என்னும் பெயரில் ஒரு இணைய பக்கம் தயாராகிறது இதில் மருத்துவ குறிப்புகள், மருத்துவர் ஆலோசனை, சிகிச்சைக்கு சலுகை, சிகிச்சைக்கு முன்பதிவு போன்ற பல இருக்குமாறு வடிவமைக்கப்பட்டு குறுகிய வருடத்தில் நல்ல லாபம் வந்தது. நிறுவனம் பெரிதாக வளர்ந்தது.
வேலை இல்லாமல் இருப்போருக்கு தன் நிறுவனத்தில் வேலை கொடுக்கிறான். தன் கல்லூரி ஆசிரியர் சொன்னது இப்போது நடந்துவிட்டது. இதில் கொஞ்சம் சுவாரசியமாக இருக்க சில அனிமேசன் விடியோக்களை நான் தயார் செய்தேன்.
இந்த ஆஞ்சநேயா வேனுக்கும் என் நினைவுகளில் ஒரு பங்கு இருக்கிறது. ஒருவருடம் இது பட்ட பாடு எங்களுக்கு மட்டும் தெரியும். ஒருமுறை மனோஜ் உடல் நிலை சரியில்லை என்றதும் நண்பர்கள் பாத்து பேர்கு மேல இந்த வேனில் தான் சென்றோம். கல்லூரி மதிய உணவுக்கு இதில் தான் செல்லோவோம். ஊட்டி, சென்னை, பாண்டிச்சேரி என பல ஊர்கள் சுத்தினோம். இதற்கு முழு காரணமாக இருந்தது ஜவகர் தான் ஏன்னா அவன் தான் வண்டிய ஓடுவான்.
மதுரையில் நன்பனில் சகோதிரன் திருமணத்திற்கு சென்றபொழுது.
பட்டபடிப்பு முடிந்ததும் பினிக்ஸ் கார்மேன்ட்ச்சில் மனிதவளத்துறை வேலையில் சேர்ந்தேன். அங்கு திரு.மாரப்பன் மனிதவளத்துறை மேலாளர் எனக்கு உறுதுணையாக இருந்து பணிகளை சொல்லித்தந்தார் அவருக்கும் எனது நன்றிகள். எனது துறையில் சக ஊழியராக இருந்த செல்வம் அவர்களுக்கும் நன்றி.
கோவை ப்ராபர்டி மேனேஜ்மென்ட் செர்வீசஸ் (பி) லிட்- கோயம்பத்தூர், ஓய்வு காலங்களை மகிழ்சியாக இருக்க மூத்த குடிமக்களுக்கு தனிவீடு கட்டி அவர்களுக்கு உணவு, மருத்துவம், கேளிக்கை மற்றும் பல சேவைகள் செய்யும் நிறுவனம் அங்கு மனிதவளத்துறை அலுவலராக சேர்ந்தேன். பணியமர்த்தல் கையாளுதல், செயல்திறன் மேலாண்மை, தகுதி ஆராய்வு, சம்பலபட்டியல் தயார் செய்தல், பணியாளர் ஈடுபாடு, பயிற்சிகள், குறைகள் கையாளுதல், சட்டரீதியான பணிகள், பணியாளர் உறவு/தக்கவைத்தல் போன்ற பணிகள் மேற்கொண்டேன்.
நிறுவன இயக்குனர் கர்னல். அச்சல் ஸ்ரீதரன், முன்னால் ராணுவ கர்னல் அதிகாரி மிகவும் பண்பானவர், ஏழைகளுக்கு இலவச பள்ளிகூடங்கள் கட்டியவர், தொழிலாளர் நலன் கொண்டவர்.
மனிதவளத்துறை மேலாளர் வின்கமேண்டர் பாஸ் ராஜ், முன்னால் ராணுவ அதிகாரி மனிதவளத்துறையில் பல யுத்திகள் எனக்கு கற்று தந்தவர், இவரிடம் எனக்கு பிடித்தது குழப்பமான சூழ்நிலையில் பொறுமையாக இருக்க வேண்டும். என்னதான் வேலை முக்கியமாக இருந்தாலும் வீட்டில் இருந்து வரும் அழைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பார். தினமும் மதிய உணவு முடிந்ததும் தொலைபேசியில் மனைவிக்கு அழைத்து சாப்டியானு கேப்பார் இது பார்க்கும் நமக்கு வேடிக்கையாக இருந்தாலும் அவர் தன் மணைவி மீது கொண்டுள்ள அன்புக்கு ஈடே இல்லை.
முதலில் நான் பணிபுரிந்த அலுவலகம் ஒரு வீடு ஆகையால் பணியிடம் போல தெரியாது, அங்கு பணிபுரிந்த அனைவரும் நல்ல நட்புடன் இருந்தனர்.
கொள்முதல் துறையில் திரு. ப்ரயீன்குமார், திரு. அருண்குமார், திரு. உன்னிக்ரிஷ்ணன் ஆகியோரிடம் நல்ல நட்பு வட்டாரமாக இருந்தனர்.
நிதி துறையில் செல்வி.பஸிஹா தான் எனக்கு இந்த நிறுவனத்தில் பணியில் சேர சிபாரிசு செய்தவர் அங்கு இருந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்து அங்கு மனிதவளத்துறை பணிகளை எனக்கு சொல்லி தந்தவர் அவருக்கும் எனது நன்றிகள்.
சந்தைப்படுத்தல் துறையில் இருந்த செல்வி.ஹேமலதா (சீக்குக்கோழி) இன்றுவரை சிறந்த தோழியாக இருக்கிறார். ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக பேசினாலே இந்த உலகம் காதலர்கள் என்று பட்டம் சூட்டும் உலகம் அதையும் தாண்டி ஒரு நல்ல நட்பாக கிடைத்தவல்.
Mrs.Fasiha- Finance
Mr.Balasubramaniam - Finance
19 நவம்பர் 2012 டைனமிக் டெக்னோ மெடிகல்ஸ் (பி) லிட் - சூலூர் மருத்துவம் சார்ந்த தயாரிப்புகள் தயாரிக்கும் நிறுவனம். இங்கு செய்யல இயக்குனர் திரு. சுகுமாரன் பொறுப்பின் கீழ் வரும் மனிதவளத்துறையில் மனிதவளத்துறை நிர்வாகியாக பொருப்பேற்றேன்.
நிர்வாக இயக்குனர் திரு.வாசுதேவன் மற்றும் திருமதி.நந்தினி வாசுதேவன் பழனி திருகோவிலில் அவர்களுக்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தபொழுது.
Mr.Vasudevan - Corporate Managing Director
Mr.Sukumaran - Executive Director
Mr.Kenneth M Michael - Manager Operation
Mr.Anilkumar - Production
Mr.Dhanasekar - Accounts
Mr.Girish - Production
Mr.Jagadeesh - Stores
Mr.Sudhakar - Production
மனிதவளத்துறை மேலாளர் திரு.திருப்பதி, என்னுடைய மேலாளர் என்ற பாகுபாடு இல்லாமல் நல்ல நண்பராக இருப்பவர். நான் பணியில் செய்யும் தவறுகளை எனக்கு சுட்டி காட்டி எளிய முறையில் தீர்வு சொல்லுவார். அவரிடம் எனக்கு பிடித்தது அவர் குடும்பத்தின் மீது இருக்கும் அதீத பாசம் மற்றும் தன் தந்தை மீது அதிக மரியாதை தான். வார விடுமுறைகளை தன் குடும்பத்துடன் செலவு செய்பவர். ஒரு பெரிய கூட்டு குடும்பம் ஒன்றை இப்போது பார்க்கவேண்டும் என்றால் கண்டிப்பாக கரூரில் உள்ள திருப்பதி இல்லத்தில் பார்க்கலாம்.
கொள்முதல் துறையில் திரு. சுப்பையா முன்னால் ராணுவ அதிகாரி, எனக்கு ஒரு தந்தை போல இருப்பவர், எங்களுக்குள் எப்பொழுதும் எதாவது தகவல் பரிமாற்றம் இருந்துகொண்டே இருக்கம். பல விவாதங்களும் இருக்கும். அதிகமாக என் கருத்துக்களுக்கு எதிர் கருத்து வைப்பார், ஒரு மகனாக இருந்தால் அப்பாவின் எதிர்கருத்துக்களை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். தினமும் மதிய உணவில் அவர் கொண்டுவரும் பொரியல், குழம்பு, ரசத்தில் எனக்கு ஒரு பங்கு இருக்கும். எனக்கு இவரிடம் பிடித்தது தன்னம்பிக்கை, கணினியில் இவரின் தட்டச்சு வேகம், பழமொழிகள் பேசுவார். பலசமயம் நிர்வாகத்தில் வரும் பல சிக்கல்களுக்கு எளிய விடையம் சொல்லுவார்.
முதல் தொடுதிரை கைபேசி:
மின்னணு சாதனங்கள் எப்பொழுதும் நம் வாழ்கையை எளிமையாகுகிறது கைபேசி இப்பொழுது அனைவருக்கும் ஒரு உடல் உறுப்பு போல் ஆகிவிட்டது., மைக்ரோ மேக்ஸ் கேன்வாஸ் தொடுதிரை கைபேசி, நவம்பர் 2013 முதல் என்னுடன் இருந்து நவம்பர் 2015 தன் செயல்களை நிறுத்திவிட்டது.
முதல் வாகனம்:
எல்லோருக்கும் தனக்கு சொந்தமாக ஒரு வாகனம் இருக்கவேண்டும் என்ற ஆசை உண்டு என் கணவு வாகனமாக கவசகி நிஞ்ச இருந்தாலும் அதற்கு ஈடு கொடுக்கும் ஒரு கம்பீர வாகனம் ராயல் என்பில்டு புல்லட் தான் 28 மார்ச் 2017 என் முதல் சொந்த வாகனம் முழு தொகை நான் போட்டாலும் இதற்கு ஆணிவேராக இருந்தது என் நண்பன் கிருஷ்ணாகுமார் தான்.
.
வெளிநாடு போக நான் ரெடி சுத்தி பாக்க மட்டும் தான்.
எத பாத்தலும் ஆதாரோட இணைக்க சொல்லுறாங்க இங்கையும் நான் இனசுட்டேன்.
நான் ஒட்டு போடா ரெடி, ஒரு நல்ல ஆட்சியர் அரசியலுக்கு நிற்கும் முன்பே பொது சேவை செய்யும் ஒருவராக இருக்க வேண்டும், அதுவரை என் ஓட்டு நோட்டக்கு தான்.
நாங்க சைக்கில் ஓட்டுவோம், மொப்பட் ஓட்டுவோம், பைக் ஓட்டுவோம், ஏன் கார் கூட ஓட்டுவோம், அந்த ராக்கெட் ஓட்ட தான் எங்க லைசன்ஸ் தருவாங்கன்னு தெரியல
.
நாங்களும் வருமானவரி கணக்கு வச்சிருக்குறோம், என்ன இந்த காடை எந்த ஏ.டி.எம் மில் போட்டாலும் காசு வரமாட்டிங்குது, ஆனா வரினு இதுல தான் டெபாசிட் ஆகுது.
எனக்கு மலையில்வாகனம் ஓட்டுவது எனக்கு பிடிக்கும்.
ஒரு நீண்டதூர பயணம்
2009,அகஸ்ட் 2ஆம் தேதி நான், கார்திக், மனோஜ், சபரீஸ் பைக்கில் ஈரோட்டிலிருந்து மதுரைக்கு ஒரு நீண்ட தூர பயணம் செய்தோம்.
நள்ளிரவு 11.45க்கு தருமத்துபட்டியில் ஒரு பைக் டயர் பஞ்சர் ஆனது.
உதவிக்கு யாரும் இல்லாமல் தவித்த ஒரு தருணம்.
நண்பர்கள் தின கொண்டாட்டம் நள்ளிரவில்
பஞ்சறை சரிசெய்து அதிகாலை 5 மணிக்கு மதுரையை அடைந்தோம்.
வெள்ளி மலை எனப்படும் வெள்ளியங்கிரியே கயிலை மலை என்று போற்றப்படுகிறது. உத்தர கயிலை, மத்திய கயிலை, தட்சிண கயிலை எனக் கயிலை மூன்றாகும். உத்தர கயிலை வடக்கே நீர்ப்பகுதியில் உள்ளது. மத்திய கயிலை இமயமலையில் உள்ளது. வெள்ளியங்கிரியே தட்சிய கயிலையாகும்.
வெள்ளியங்கிரி மலை தமிழ்நாடு கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர். தென்கயிலை என பக்தர்களால் அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலையானது கொட்டும் பனியும், கை தொட்டு விளையாடும் உயரத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் "வெள்ளியங்கிரி" என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 5000 அடி,1524 m) இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம்.இரவில், மலையில் காட்டு யானைகள் மற்றும் விலங்குகளின் நடமாட்டம் தொடங்கிவிடும் என்பதால் இங்கிருந்து மாலையிலேயே திரும்பி விடுதல் பாதுகாப்பானது என்று சொல்லபடுகிறது ஆனால் அனைவரும் இரவில் பயணத்தை தொடங்கி அதிகாலை மலை உச்சிக்கு சென்று சேர்கிறார்கள். அதிக மக்கள் நடமாட்டத்தால் வனவிலங்குகள் அங்கு இருப்பதை தவிர்க்கின்றன.