0

முதலில் என் விவரத் தொகுப்பு பக்கம் பார்க்க வந்தமைக்கு உங்களுக்கு எனது நன்றிகள். இந்த தொகுப்பை பதிவிட உதவிய Bloggerக்கு எனது நன்றிகள். எனது வாழ்வில் மிகமுக்கிய பங்களிப்பாளர்கள் எனது குடும்பத்தார்.  




அதிகமாக சண்டை போட்டாலும் என்னக்கு எப்பவும் செல்லம் என் அம்மாதான்.


அப்புச்சி கணபதியப்ப கௌண்டர் அம்முசிக்கு சுப்பம்மாள்
எனது அப்புச்சி கணபதியப்ப கௌண்டர் அம்முசி சுப்பம்மாள்'க்கு  நான் தான் முதல் மற்றும் செல்லப் பேரன், சிறுவயதில் தெக்கலூரை அடுத்து காமநாய்க்கன்பாளையம் கிராமத்தில் எனது அப்புச்சி வீட்டில் தான் வளர்ந்தேன், 


எனது அப்புச்சி ஒரு விவசாயி, தான் சொந்த உழைப்பால் வளர்ந்தவர். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள்.

மூத்தவர் சாந்தாமணி எனது பெரியம்மா (நான் சாந்தி அம்மான்னுதான் கூப்பிடுவேன்) இளையவள் பூபதி என் அம்மா. என்னடா பூபதினு பையன் பெயர்னு நினைக்காதீங்க பசங்கள விட ரொம்ப சேட்டை பண்ணுவாங்கலாம். பத்தாவதுதான் படிப்பு ஆனால் பண்ணையம் பண்ணுவதில் கெட்டிக்காரி.



எனது அப்புச்சிக்கு அம்மா இருந்தார்கள் அனைத்து உறவும் ஒதுக்கிய பின் இறுதி காலங்களை எனது அப்புச்சி கவனிப்பில் வாழ்ந்தார்.

22/11/1985ஆம் நாள் எனது பெற்றோர்க்கு திருமணம் நடந்தது.

 
அம்மா, நான், அப்பா


1968 டிசம்பர் மாதம் 3ஆம் நாள் கோயம்பத்தூர் சீல மருத்துவமனையில் அதிகாலை 4.17 மணிக்கு நான் பிறந்தேன்.

எனக்கு மிகவும் என் அம்மாவைத்தான் பிடிக்கும். எனக்கு நிலா சோறூட்டி, சீராட்டி வளர்த்தவள். என் அம்மாவிற்கு கோழிகள், மாடுகள், ஆடுகள் வளர்க்க பிடிக்கும். மிகவும் துறுதுறுப்பாக இருப்பாள். எனக்கு நன்மை தீமை கற்றுத்தந்தால் அனைத்து உறவு முறையையும் சொல்லித்தந்தால். என் சமையலை மிகவும் பாராட்டுவாள். நான் போடும் மசாலா தேநீர் அம்மாவிற்கு பிடிக்கும். எனது விருப்பங்களை பூர்த்தி செய்பவள். என்னக்கு உடல் சரியில்லை என்றால் துடித்துப் போவாள்.

நரேந்திர குமார் இளைய சகோதரன் 
1987லில் எனது பெரியம்மாக்கு ஒரு மகன் பிறந்தான் எனது இளைய சகோதரன் நரேந்திர குமார். மிகவும் அமைதியான குணம் படைத்த சகோதரன், பண்டிகை மற்றும் விடுமுறைக்கு அப்புசி வீட்டில் நான் என் தங்கை மற்றும் குமார் மூவரும் சேர்ந்து விளையாடுவோம். தீபாவளி பட்டாசுகளை பகிர்ந்து வெடிப்போம், களிமண் கோட்டை காட்டுவோம், கட்டை வண்டி ஓட்டுவோம், பனைஓலை காத்தாடி, தெனைக்கீற்று கடிகாரம், டயர் வண்டி, நொங்கு வண்டி என பல இனிய நிகழ்வுகள்.

2009 பிப்ரவரி 13ஆம் நாள் ஒரு விபத்தில் எங்கள் உள்ளங்களில் தங்கி இந்த உலகில் இருந்து மறைந்தான். 

பெரியப்பா(பாலசுப்பிரமணி), இளைய சகோதரன் (நரேந்திரகுமார்), பெரியம்மா(சாந்தி அம்மா), இளைய சகோதரி(சுதா), நான் (பிரபு என்கிற ஆனந்), என் அம்மா (சின்னக்கண்ணா என்கிற பூபதி)


சுதா இளைய சகோதரி:
1988, ஏப்ரல் 1ஆம் தேதி எனக்கு இளைய சகோதரி பிறந்தால் (சுதா என்கிற காயத்ரி).




சுதா அப்பா செல்லம், சுதாவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எங்கள் வீட்டு ஸ்பூன், கத்தி, டீவி ரிமோட் முதல் கதவு ஜன்னல் வரை அனைத்தும் அலறும். நானும் சுதாவும் ஒன்றாக சண்டை இல்லாமல் ஒரு நாள் இருந்தால் அந்த நாள் வரலாற்றில் ஒரு முக்கிய நாளாக இருந்திருக்கும். 


சண்டை முடிவில் என் வலிமை ஓங்கும், சுதா அழுகை ஓங்கும் என் அப்பா சத்தம் ஓங்க சண்டை முடிவடையும்.  







புதுப்பாளையம் கிராமம், பெரிய காடு தான் எனது அப்பா (நடராஜ்), தாத்தா(மாறப்ப கௌண்டர்), பாட்டி (கருணை அம்மாள்) கொள்ளுப்பாட்டி(கருப்பாத்தாள்), என் அம்மா, என் தங்கை மற்றும் நான் வாழ்ந்த வீடு, ஒரு அழகான கூட்டு குடும்பம். என் தாத்தாவிற்கு மூன்று குழந்தைகள் என் அப்பா மூத்தவர், மற்றும் இரண்டு இளைய சகோதரிகள்.

அத்தை குடும்பத்தார்:


 பெரிய அத்தை பொண்ணு காவிதா(பேபி அக்கா), சின்ன அத்தை பொண்ணு மலர்விழி, தீபிகா, சின்ன அத்தை பொண்ணு ப்ரியா, தங்கை, மச்சான், பெரிய அத்தை மகன் சிவப்பிரகாஷ்(மச்சான்), பேபி அக்கா கணவர் சதீஷ்குமார், மலர்விழி கணவர், சின்ன அத்தை மகன் கலைப்பிரகாஷ்.

பெரிய மாமா, சின்ன மாமா:
பெரிய மாமா சிவசாமி மற்றும் சின்ன மாமா நடராஜ் 

 பெரியம்மா குடும்பத்தார்:

பெரியம்மா, பெரியப்பா, பெரியப்பா பையன் நவநீத்


விடுமுறை என்றால் விழாபோல வீடு மாறிவிடும்


மாறாத்தாள் கொள்ளுப்பாட்டி - மறைவு (22-04-2004)

என்னை அதிகம் நலன் விசாரிப்பார் அதிகம் ஆசிர்வதித்தவர், 100 ஆண்டுக்கு மேல் வாழ்ந்தது என் கொள்ளுப்பாட்டி தான். இறுதி காலம் வரை கைத்தடி கூட பையன் படுத்தவில்லை. கண்கண்ணாடி போட்டதில்லை. பாட்டியைவிட கொள்ளுப்பாட்டிக்கு உடல் வலு அதிகம். கொள்ளுப்பாட்டிக்கு மூன்று மகன்கள்
 
கருணை அம்மாள் பாட்டி- மறைவு (13-01-2015)


சமைப்பது அம்மா மற்றும் பாட்டி தான். எனது பாட்டி செய்யும் ராகி காலி எனக்கு மிகவும் பிடிக்கும். பாட்டி தான் கடைக்கு சென்று சமையலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வாங்கிவருவார். வீட்டுக்கு வருபவர்கள் அனைவருக்கும் உணவு தயாரிப்பார். தோட்டத்து வேலை செய்பவருக்கும் காலை தேநீர், மத்திய உணவு, மாலை தேநீர் சிலசமயம் இரவு உணவும் தாயார் செய்வார். மாடு, ஆடு, கோழி, நாய், பூனை, எருமைகளுக்கு உணவு தண்ணீர் கொடுப்பது பாட்டியின் வழக்கமான பணிகள். பிப்ரவரி 2015 இயற்க்கை எய்தினார்.

மாறப்ப கௌண்டர் தாத்தா - மறைவு (7-10-2016)


காலை தோட்டம் சென்றால் மாலை வீடுவருவார். என்னக்கு தினமும் கதைகள் சொல்லுவார், வீட்டு வரவு செலவுகள் அனைத்தும் பார்த்துக்கொள்வார். பயிர்கள், எருதுகளை வளர்பது பாதுகாப்பது வழக்கமான பணிகள். நவம்பர் 2015 இயற்க்கை எய்தினார்.

பூபதி அம்மா 12-09-1966

என் தங்கை மற்றும் என்னை பள்ளிக்கு தயார் செய்தல், எங்களுக்கு உணவு கொடுத்தல், பாடப்புத்தகங்களை சரிசெய்து பள்ளி வாகனத்துக்கு கூட்டி செல்வது, வீடு சுத்தம் செய்வது, பாத்திரங்கள் கழுவுவது, தொழிலாளர்களுக்கு தேநீர் தயாரிப்பது, மாடுகள், ஆடுகள் வளர்ப்பது, பிறகு தொழிற்சாலை மேற்பார்வை செய்தல், எங்களுக்கு பாடம் சொல்லித்தருவது வழக்கமான பணிகள்.

நடராஜ் அப்பா


சக்தி டெக்ஸ் என்ற பெயரில் விசைத்தறி தொழில் செய்தார், எங்கள் கிராமத்தில் பெரியகாடு நடராஜ்/சத்தி என்றால் அனைவருக்கும் தெரியும். பலருக்கு விசைத்தறி தொழில் கற்றுத்தந்தார், தொழிலாளர்களை அனைவரையும் வீட்டு நபர்போலா அக்கறையுடன் நடந்துகொள்வார். தொழில் நன்றாக வளர்ந்து ஏற்றுமதி செய்யும் அளவு நிறுவனம் உயர்ந்தது. மகா லக்ஷ்மி எஸ்ப்போர்ட்ஸ் என்ற பெயரில் நிறுவனம் மாறியது.

வசிக்கும் வீடு 


கோவை சேலம் நெடுஞ்சாலையில் ஓர் நிலம் வாங்கி கீழ்தளம் வணிக அலுவலகத்திற்கும் மேல்தளத்தில் வீடும் 2000-2004லில் திறப்பு விழா கண்டது.

எங்கள் தோட்டத்தில் காளை, மாடுகள், எருமைகள், வெள்ளாடுகள் இருந்தன. அதிகாலை முதல் இரவு வரை அனைவரும் வேகமாக செயல்படுவார்கள்.

தனபால் மச்சான்:
  

கோவை இருகூரை சேர்ந்தவர், பொள்ளாச்சி குலத்திப்பாளையத்தில் Asian Coir தேங்காய் நார் நிறுவனம் நடத்தடி வருகிறார். என் தங்கைக்கு இரு பெண் குழந்தைகள் விஷமாகி



மச்சான் குடும்பத்தினர் :

   

Post a Comment

 
Top