0
முதுநிலை வணிக நிர்வாகம் பட்டப்படிப்பின் போது ஒரு மேடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எங்களுக்கு கொடுத்த தலைப்பு "MASK", அனைவரும் தனிதனி குழுக்களாக பிரிந்து சிறுநிரல் தயாரிக்க தொடங்கினோம். என் குழுவிற்கு தலைமை வகித்தவர் திரு.மோகன் அவர்கள். எங்கள் குழுவில் கார்த்திக், முத்துகிருஷ்ணன், சைபுதீன், டென்சில் டேவிஸ் ,  ஆனந்த பிரியா, அஞ்சு, சுதிஷா. முதலில் நாங்கள் ஹர்ஷத் மேத்தாவின் நிதி குற்றம் கதையை தேர்வு செய்தோம் பின் கதையை மாற்றினும் இறுதியாக அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு சொந்தமான கதையை உருவாக்கினோம்.


கதையின் நாயகன் ஒரு நிறுவனத்தில் காப்பீடு பிரிவில் பணிபுரிபவன். 2008-2009 உலகளாவிய நிதி நெருக்கடியின் காரணமாக தனது வேலை பறிபோகிறது. வேலை இல்லமால் திண்டாடும் நம்ம நாயகன் வீட்டில் தெண்ட சோறு பட்டமும், பல நிறுவனங்கள் நேர்காணலின் புறக்கணித்து சோர்ந்து போகிறான்.


ஒரு நாள் தனது கல்லூரி பேராசிரியரை எதர்ச்சியாக சந்திக்கிறான். தனது நிலைமையை சொல்ல அவரோ உபதேசம் சொல்ல தொடங்கினார். நாயகன் கேட்ட பலர் உபதேசம் போலவே இருந்தது. இறுதியாக அவர்சொன்ன வார்த்தை "அனைத்து சக்திகளும் உனக்குள் இருக்கிறது சரியான தருணத்தில் அதை பயன்படுத்து" என் சொல்லி பிரிந்தார்.



வீடு திரும்பிய நாயகனுக்கு ஒரே குழப்பம், என்ன செய்வது என்று தெரியவில்லை. சொந்த தொழில் செய்யவும் நிதி இல்லை, எங்கும் வேலை இல்லை.

ஒரு நாள் நாயகனின்  நண்பன் தனது திருமணத்திர்க்கு அழைக்க வீட்டுக்கு வந்திருந்தான், நாயகன் தான் நிலையை சொல்ல மருத்துவனான தான் நண்பன் ஒரு ஆலோசனை சொன்னான், தன்னிடம் வரும் நோயாளிகள் அதிக அளவில் இருப்பதால் ஒருநாளில் அனைவரையும் பார்க்க முடிவதில்லை, மருத்துவ ஆலோசனை கேற்க மணிக்கணக்கில் காத்திருக்கிறார்கள் இதற்கு தீர்வு ஏதாவது செய் என்றான்.

அப்போது நாயகனுக்கு என் ஞாபகம் வர என்னை சந்திக்கிறான். நான் ஒரு கணினி வல்லுநர், என்னிடம் தனது யோசனையை கூறினான். அதற்கு நான் ஆன்லைன் மருத்துவ ஆலோசனை வசதி செய்தால் இதற்கு நல்ல தீர்வாக இருக்கும். ஆனால் டொமைன், இணைய வளர்ச்சி இதர்கெல்லாம் செலவாகும் என்றேன், முகம் சோர்ந்த நண்பனை பார்த்ததும் ஆனால் டொமைன், இணைய வளர்ச்சி செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் லாபம் வரும்போது எனக்கு கொடுத்தால் போதும் என்றேன். www.themask.com(கதைக்காக)
வலைத்தளம் உருவானது. இதில் பல மருத்துவர்கள் இணைந்தார்கள் இலவச ஆலோசனை மற்றும் மருத்துவர் சந்திக்க நல்ல தலமாக உருவானது.



நாயகன் தொழிலாளியாக இருந்து தொழிலதிபரானான். தான் வந்த பாதையை மறக்காமல் வேலை இல்லாமல் திண்டாடும் பலருக்கு வேலைவாய்ப்பு வழங்கினான். கதை முடிந்தந்து. 

இறுதி முடிவிற்காக காத்திருந்தோம்.. எங்கள் கதை, மாறுதலான அமைப்பு, எங்கள் குழு முயற்சிக்கு கிடைத்த வெற்றி முதலி பரிசை பெற்றோம்.

Post a Comment

 
Top